கீழ்வேளூர்:
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகளில் செங்கொடியின் பூமியான கீழ்வேளூர்தொகுதியும் ஒன்று.அதன் வேட்பாளராக வேத.முகுந்தன் என்பவர் அறிவிக்கப்பட்டு வாக்குச் சேகரிப்பிலும் அக்கட்சி இடம்பெற்றிருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செல்லும் திசையெங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான நாகைமாலிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதை அறிந்த பாமக, தற்சமயம் திடீரென தனதுவேட்பாளரை மாற்றியுள்ளது. வேத.முகுந்தன்மாற்றப்பட்டு வடிவேல் ராவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும் அவரையும் அக்கட்சி மாற்ற வாய்ப்புள்ளது என அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர்.பாமக-வின் பின்வாங்கும் நடவடிக்கையால் திமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள்அதீத உற்சாகத்துடன் களப்பணியாற்றி, அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.