சென்னை
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகளை தொடர்ந்து 8:30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரதத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன.
மதியம் 1 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 150 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 120 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தை கட்சி 4 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், கொமதேக, மமக தலா 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதிமுக - பாஜக கூட்டணி 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 73 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமலஹாசன் முன்னிலையில் இருப்பதால் மநீம கூட்டணி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. அமமுக கூட்டணிக்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை வாய்ப்பு இல்லாமல் திணறி வருகிறது.