ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் மார்னஸ் லபுஷேன் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷஸ் 2-வது டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் அந்த அணியின் பேட்டர் லபுஷேன், முதல் டெஸ்டில் 74 ரன்களும், 2வது டெஸ்டில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தார்.
இதன் மூலம் 912 புள்ளிகளுடன் லபுஷேனும், 897 புள்ளிகளுடன் ஜோ ரூட்டும் முதல் இரு இடங்களில் உள்ளனர். ஸ்மித், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளார்கள். மேலும், டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் மற்றும் இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.