கோவை:
தேர்தல் நடத்தை விதி மீறியதாக அமைச்சர் எஸ்பி.வேலுமணி மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் தன்னுடைய வாக்கு செலுத்துவதற்காகச் சென்றிருந்தார். தேர்தல் விதி முறைப்படி 100 மீட்டர் இடைவெளிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் வாகனத்திற்கு அனுமதி இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வாகனத்தைவாக்குச்சாவடிக்கு அருகிலேயே வந்து நிறுத்தினார். அத்துடன் கட்சிக் கொடியுடன் வந்தார். இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், பரப்புரை செய்யும் விதமாக இருப்பதாகவும் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.