election2021

img

அசாமில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி... பாஜக எம்எல்ஏக்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.... மல்லிகார்ஜூன கார்கே பேச்சு...

திஸ்பூர்:
அசாமில் பாஜக கூட்டணி மீது கடும்அதிருப்தி இருப்பதாகவும், வாக்கு கேட்டு வரும் அந்தக் கட்சி எம்எல்ஏ-க்களை தொகுதிக்கு உள்ளேயே விடாமல் மக்கள் விரட்டியடிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே, இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருப்பதாவது:அசாமில் முதற்கட்டமாக தேர்தல் நடந்த 47 தொகுதிகளில் காங்கிரசுக்கு மக் கள் அமோக ஆதரவு அளித்ததை காணமுடிந்தது. இன்னும் 2 கட்டத் தேர்தல்கள்இருக்கின்றன. அவற்றிலும் இதே அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறோம். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக
வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

இங்கு நடைபெறும் பாஜக ஆட்சியில் மக்கள் மிகவும் வெறுப்படைந்து உள்ளனர். குறிப்பாக முதல்வருக்கு எதிராக அலை வீசுகிறது. பல எம்எல்ஏ-க்களால் தொகுதிக்கே செல்ல முடியவில்லை. மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்.பாஜகவில் உள்ள 60 எம்எல்ஏக்களில் 11 பேருக்கு சீட்டு கொடுக்கவில்லை. அந்தஅளவுக்கு ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைஅமல்படுத்தமாட்டோம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ. 365 ஆக உயர்த்தப்படும். 5 லட்சம்பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று நாங்கள் திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அசாமில் 15 ஆண்டுகள் தருண்கோகோய் ஆட்சி இருந்தது. அப்போது ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதை மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இப்போது நாங்கள் 5 முக்கியஅறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். அவற்றை மக்கள் முழுமையாக நம்புகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜககூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி.இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.