திமுக கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. இதன்படி திமுக 173 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் - 25, சிபிஎம் - 6, சிபிஐ - 6, மதிமுக - 6, விசிக - 6, கொமதேக - 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மமக - 2, பார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவை தலா ஒரு இடம் என மொத்தம் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் மதிமுக, கொமதேக, மமக (2ல் 1), பார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதிதமிழர் பேரவை ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி 234 தொகுதிகளில் 187 இடங்களில் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது.