election-2019

img

மோடியை கீழே இறக்கியே தீர வேண்டும்

எனக்கு 65 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை, கதை, கட்டுரை என்று இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.



ஒரு எழுத்தாளனாக, என் வாழ்வில் கடந்த ஐந்தாண்டுகளைப் போல மன உளைச்சல் அடைந்த காலம் வேறு எப்போதும் இருந்த தில்லை. அச்ச உணர்வையும் அவ நம்பிக்கை உணர்வையும் கடப்பதற்கு முடியாமல் என் மனம் தத்தளித்த காலம் இது.சங் பரிவாரங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சகிப்பின்மை கரைபுரண்டு ஓடிய காலமாக இது இருந்தது. அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் அறிஞர்கள் கொல்லப்படுவதும் இக்காலத்தில்தான் அதிகமாக நடந்தது. அது மோடியின் பக்க பலத்தோடு நடந்தது. எட்டு வயதுச் சிறுமி ஆஷிபாவை, கோவிலில் வைத்து எட்டு நாட்கள் பாலியல் வன்முறை செய்து கொன்றவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் பாஜகவினர். நாடே கொந்தளித்த பிறகு சாவகாசமாக ‘நாட்டின் மகள்களைப் பாதுகாப்பேன்’ என்று மாரைத்தட்டிக் கொண்டு பம்மாத்துப் பண்ணியவர். இந்த மோடி. ஆஷிபாவின் முகம் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அந்தக்குழந்தைக்குச் சொல்ல என்னதான் பதில் இருக்கிறது நம்மிடம்? மோடி ஆட்சியில் இன்னும் தொடர்ந்தால் பொள்ளாச்சிக் கயவர்கள் வேண்டுமானால் உற்சாகமடையலாம். நாம் அடைய முடியாது. 


சகிப்பின்மையின் பாதுகாவலராக, கொலை யாளிகளின் பாதுகாவலராக, பாலியல் குற்றவாளிகளின்பாதுகாவலராக, பன்னாட்டு முதலாளிகளின் பாதுகாவ லராக இருந்துகொண்டு நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக்கூட நானே தீர்மானிப்பேன் என்கிற இறுமாப்புடன் அசைக்க முடியாத உறுதியுடன் நடை போடும் மோடியை கீழே இறக்கியே தீர வேண்டும்.குஜராத் படுகொலைகளுக்காகவும் ஆஷிபா வின் கொலையாளிகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்ப தற்காகவும் மோடியை நான் மனதின் அடி ஆழத்தி லிருந்து வெறுக்கிறேன்.


ச.தமிழ்ச்செல்வன்

;