election-2019

img

‘நூறு இடங்கள் கூட பாஜகவுக்கு கிடைக்காது’

நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலை மக்களிடையே வலுவாக உள்ளது. ஆகவே தமிழகத்தில் நாற்பது மக்களவை தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான பி.ஆர். நடராஜன் பொதுமக்களோடு இரண்டறக் கலந்தவர். பொதுமக்களின் பிரச்சனைகளில் களத்தில் நின்றவர். எளிய மக்களின் நலனுக்காக போராடுகின்ற ஒருவரைத்தான் பொதுமக்கள் தேரந்தெடுப்பார்கள்.


 பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பொய் கூறி வருகின்றனர். 350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தைரியமாக கூற வேண்டியது தானே. அவர்களுக்கே நூறு தொகுதிகளாவது வருமா எனத் தெரியாமல்தான் பொய்யைத் தயங்கி தயங்கி கூறி வருகின்றனர்.


தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனைகளை நடத்துகிறார்கள். தமிழகத்தில் அதிகபட்ச பணம் எங்கு உள்ளது என்பது கடைக்கோடி வாக்காளருக்கும் தெரியும். இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இவர்கள் ஆட்டம். அப்புறம் காணாமல் போய்விடுவார்கள்.



 கோவையில் இயக்குநர் கரு.பழனியப்பன்  பேசியதிலிருந்து...

;