election-2019

img

தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 4 முதியவர்களை உயிரிழப்பு

தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற 4 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதி நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.49 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரிசையில் நின்ற 4 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.  

சேலம் வேடப்பட்டியில் பகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்ற முதியவர் கிருஷ்ணன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். 

வேலூர் வாலாஜாபேட்டை அருகே அனந்தலை பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க நின்று கொண்டிருந்த மூதாட்டி  துளசி மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாக்கி அருகே குருங்கலூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மல்லிகா என்ற மூதாட்டி உயிரிழந்தார். அதேபோல் ஈரோடு சிவகிரி பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற முருகேசன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதிகளில் வாக்களிக்க வந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


;