election-2019

img

பிஜேபி அல்ல சிஜேபி

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்ன தையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன். சுப்பிரமணிய சாமி யார் என்பதும் உங்களுக்கு தெரியும், அவரும் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர் தான். நம்மைக் கண்டால் அவருக்கு சுத்தமாகபிடிக்காது, அவரும் எல்லோரை யும் விமர்சித்து வாய்க்கு வந்தபடிபேசக்கூடியவர் தான். ஏதேனும்ஒரு கருத்தை அவர் எடுத்துச்சொன்னால், அவர் சொன்ன கருத்திற்கும், பி.ஜே.பிக்கும் சம்பந்தம் இல்லை என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடி யவர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். வாடிக்கை. அந்த நிலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்தியா பொருளா தாரத்தில் முன்னேறிவிட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே? மோடிக்கும் அருண்ஜெட்லி க்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. சில நாட்களுக்கு முன்பு சு.சுவாமி தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர்பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொரு ளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணிய சுவாமி சொல்லுகின்றார்.


சில நாட்களுக்கு முன்னால் ஆங்கில நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை இந்து தமிழ் நாளேட்டில் கடந்த 27-11-2018 அன்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிடுகின்றார் என்று சொன்னால், இந்திய பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது, ஜிடிபி அடிப்படையிலான வளர்ச்சி விகிதம்குறைந்து வருகின்றது, அரசு வங்கிகளில் வராக் கடன் அளவு வளர்ந்துவிட்டது என்று சுப்பிரமணிய சுவாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கின்றார்.அதைத்தொடர்ந்து இன்னொரு கருத்தையும் சொல்லுகின்றார். மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72இலட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014ஆம் ஆண்டைவிட குறைவானது என்று சுப்பிரமணிய சுவாமி ஆதாரத்தோடு குறிப்பிடு கின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார சீரழிவிற்குசுப்பிரமணிய சுவாமி கொடுத் திருக்கக்கூடிய சாட்சியங்கள்.


அப்படியானால் இந்த ஐந்து வருடத்தில் அவர் என்ன செய்தார்? அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா? பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் கேட்டால் கடன்களை தள்ளுபடி செய்வார். கேட்டால் மட்டுமல்ல கேட்கா மலேயே தள்ளுபடி செய்வார். எனவே இனிமேல் பி.ஜே.பி-யை பாரதிய ஜனதா கட்சி என்று சொல்லாதீர்கள் அது கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று சொல்லுங்கள். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பி.ஜே.பி - அல்ல சி.ஜே.பி. 


சிவகங்கை பிரச்சாரப் 

பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...


;