election-2019

img

நாடாளுமன்ற தேர்தல் 2019ன் முதல் ஓட்டு அருணாச்சலப்பிரதேசத்தில் பதிவானது

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் கிளை ஒன்றிலிருந்து ரகசிய தபால் ஓட்டு மூலம் பாதுகாப்பு படையினர் 2019 நாடாளுமன்ற தேர்தலின் முதல் வாக்கை பதிவு செய்துள்ளனர்.


இந்தாண்டின் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே மாதம் 19ம் தேதி முடிவடைய நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின்போதும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பல்வேறு பாதுகாப்பு படை சார்ந்தவர்கள் தங்களின் வாக்குகளை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே வாக்குச்சீட்டு மூலம் ரகசிய தபால் ஓட்டாக பதிவு செய்வது வழக்கமாகும்.


அதேபோல் இந்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் முதல் வாக்குப்பதிவை ரகசிய தபால் ஓட்டு மூலம் அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதி கிராமமான லோகித்பூரிலுள்ள விலங்கு பயிற்சி பள்ளி ஒன்றிலிருந்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பதிவு செய்துள்ளனர். அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் தலைவராக உள்ள சுதாகர் நடராஜன் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலின் முதல் ஓட்டாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.


மேலும், பாதுகாப்பு படையினரின் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள் குஜராத், பீகார், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


;