election-2019

img

பாஜக, அதிமுக அரசுகளால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம்

திருவாரூர், ஏப்.5-மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதரவு நிலைப்பாட்டால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பழைய பேருந்து நிலையம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எம்.செல்வராசு(சிபிஐ), திமுக வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் (திமுக) ஆகியோரை ஆதரித்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது:சோழவளநாடு சோறுடைத்து என்றும் ஆசியா கண்டத்தின் நெற் களஞ்சியம் என்றும் போற்றப்பட்ட சோழ நாட்டு மக்கள் எதிர்காலத்தில் பஞ்சமும், பட்டினியுமாகப் பரிதவிக்க நேரிடுமோ, வருங்கால சந்ததியினர் எலும்பும் தோலுமாக எத்தியோப்பியாவிலேயே இருக்கக் கூடியமக்களைப் போல ஆகி விடுவார்களோஎன்ற அச்சத்தைத் தரக் கூடியதாக உள்ளது.மேக்கே தாட்டு அணை பிரச் சனை, மத்திய அரசு இதற்கு அனுமதிஅளித்து விட்டது. எனவே ரூ.5912 கோடி நிதி ஒதுக்கப்பட்டுத் தேர்தல்முடிந்ததும் திட்டம் தொடங்கும் நிலையில் உள்ளது. இதன் விளைவு அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வராது. 25 லட்சம் ஏக்கர் பாசனத்தை இழக்க நேரிடும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. விவசாயிகள் அழிந்து போவார்கள். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் படுவார்கள். இந்த நிலத்தை வாங்க அதானி, அம்பானிகள் வருவார்கள். ஏனெனில் பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோகார் கன்களை எடுப்பதற்காக. இதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1000கோடி கிடைக்கும்.


பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக மத்திய அரசு உள்ளது.ஜிஎஸ்டி வரி மூலம் இங்குள்ள சிறு, குறு வணிக நிறுவனங்களை அழித்து விட்டது மத்திய அரசு. ஆன்லைன் வர்த்தகத்துக்கும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கும் வாசலை திறந்து வைத்து விட்டது மத்திய அரசு. வேலையில்லாமல் சுமார் 80 லட்சம் பட்டதாரிகள் உள்ளனர். கடன் வாங்கி படிக்க வைத்த பெற்றோர்களின் கனவு மண்ணோடு மண்ணாகி வட்டது. வேலையில்லா திண்டாட்டம் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம். சுமார் 6.2 சதவீதம் ஆகும்.வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி. ரூ.15கூட தரவில்லை. ஆனால் இந்த வாக்குறுதியை நம்பி கணக்கு தொடங்கியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் குறைந்த வகையில்ரூ.10361 கோடி வசூல் செய்யப்பட் டுள்ளது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 23 பேர் ரூ.90ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டுவெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம்கோடி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள் ளது. அதே போல் அவர்களின் கடன்கள் மட்டும் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசைப் பொறுத்தவரை,ரூ.400 கோடி பருப்பு ஊழல், ஆம்னிபேருந்து வாங்கிய ஊழல், நெடுஞ்சாலை டெண்டர் ஊழல், கல்வித் துறை ஊழல், துணை வேந்தர் நியமன ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் உள்ளன. தமிழகத்தில் தொழிற் சாலை தொடங்க பல்வேறு கம்பெனிகள் வந்தன. ஆனால் அந்த தொழில்நிறுவனங்களிடம் தமிழக அரசு கமிஷன் கேட்டதால், அந்த நிறுவனங்கள்பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் போற்றும் உத்தமர் காந்தி. காந்தியைதிரும்பவும் சுடுவோம் என்று கூறுகின்றனர். கோட்சேக்கு சிலை வைப்போம் என்கிறார்கள். ஆனால் இதை மத்திய அரசு கண்டிக்கவில்லை.எனவே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகள் அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;