tamilnadu

img

மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை:
வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வெப்பச்ச லனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியமாவட்டங்கள் மற்றும் திரு நெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் (நீலகிரி) 9 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சித்தாரில் 8 சென்டி மீட்டர்,  பெருஞ்சாணி, புத்தன் அணைக்கட்டில் தலா 6 சென்டி மீட்டர், பேச்சிப்பாறை, சிவலோகம், நாவ லூரில் தலா 5 செண்டி மீட்டர்மழை பதிவாகி  உள்ளது என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

;