election-2019

வழக்கமான பொய்யர்கள் இப்போது ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள்

அன்பிற்குரிய நண்பர்களே, பெரியோர்களே, வாக்காளர் பெருமக்களே, அனைவருக்கும் வணக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடனேயே மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும் அப் பாற்பட்டு, சிறந்த பண்பாட்டுத் தளத்தில் பணிபுரிகிற ஒருவரை, மார்க்சிஸ்ட் கட்சியினுடைய முழு நேர ஊழியரை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம் என்கிற முறையில் வரவேற்பளித்தனர்; பாராட்டினர் மதுரை மக்கள்.


இத்தகைய நிலையில்தான் அவர்மீது தனிப்பட்ட முறையில் வேறு எந்தகுற்றச்சாட்டையும் சொல்ல முடியாதவர்கள் திட்டமிட்டு ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது பாரதிய ஜனதா கட்சியின் சங்பரிவார் அமைப்புகள்தான். அடிப்படையில் அவர்கள் பொய்ச் செய்திகளை உற்பத்திசெய்கிற அமைப்புகள். பொய்ச் செய்திகளை உற்பத்தி செய்வது, அவதூறுகளை உற்பத்தி செய்வது என்பது அவர்களது ரத்தத்தில் ஊறிய செயலாக இருக்கிறது. அந்தக் காரணத்தினாலேயே ஆரம்பத் தில் இத்தகைய செய்திகளை உடனடியாக முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அதற்கு எதிர்வினைஇருக்கும். தவறு என்று சுட்டிக்காட்ட முடியும். எனவேதான் அவர்கள் திட்டமிட்டு இதுபொதுவெளிக்கு வரக்கூடாது; அதே சமயம் எல்லோரிடமும் சென்று அடைய வேண்டும் என்கிற முறையில் வாட்ஸ்சப் குரூப்களில் மட்டும் அவற்றை பதிவிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அதில் ஒன்றுஇந்தாண்டு சித்திரை திருவிழா நடக்கவில்லையென்றால், என்ன கெட்டுவிடப் போகிறது; குடி முழுகியா போகும்; இந்தாண்டு சித்திரை திருவிழாவை தடைசெய்ய வேண்டுமென்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சொன்னதாக ஒரு செய்தியை பரப்பினார்கள். அதேபோன்று இன்னொறு செய்தி,மதுரை உயர்நீதிமன்றத்தில் சு.வெங்கடேசன் இந்தாண்டு சித்திரை திருவிழாவை தடை செய்ய வேண்டுமென்று கோரியதாக மற்றொரு பொய்ச் செய்தியை பரப்பியிருக்கிறார்கள். இரண்டும் அடிப்படையில் உண்மையற்றவை. ஆதாரமற்றவை. ஒன்று, வேட்பாளர் சு.வெங்கடேசன்பண்பாட்டுத் தளத்தில் போராட்டம் நடத்துகிற ஒரு போராளி; தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை, மதுரையின் பாரம்பரியத்தை கொண்டாடுகிற, இன்னும் சொல்லப் போனால், தற்கால தமிழ் நல்லுலகில் இத்தகைய முன்னெடுப்பை செய்கிற வேறொருவர் கிடையாது. எனவேதான் மேற்படிகும்பல்கள் அவரை குறி வைக்கிறார்கள். அவர் எந்தக் காலத்திலும் சித்திரை திருவிழாவை தடை செய்ய வேண்டுமென்றோ அல்லது அதற்கு தடை உத்தரவு பெறவேண்டுமென்றோ, தனிப்பட்ட முறையிலோ, நீதிமன்றத்திலோ பேசியது கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் இத்தகைய நிலைபாட்டை எடுத்தது இல்லை. எங்கேயாவது அவர் அப்படி பேசியிருந்தால் நாங்கள் எப்படி உதாரணம்காட்ட முடியும் என்று ஒருவர் கேட்கலாம். அவர் அப்படி பேசியிருந்தாலோ அல்லதுஅறிக்கை விடுத்திருந்தாலோ அல்லதுசமூக வலைதளம், டிவி, பத்திரிகைகளில் அவர் அறிக்கையாக ஏதும் கொடுத்திருந் தால் எங்களது கட்சிப் பத்திரிகையில் அதுவந்திருக்கும். ஆனால் இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் ரகசியமாக பேசியதாகக்கூறி ரகசியமாகவே பிரச்சாரம் செய்வது என்பது அப்பட்டமான அவதூறுதானே!இதை பல இடங்களில் பரவ விட்டிருக்கிறார்கள்.


இதுமட்டுமல்ல, இந்து பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து கோவிலுக்குச் செல்வது என்பது, தான் உறவுக்குதயாராக இருப்பதை வெளிப்படுத்துகிற நிகழ்வு என்று யாரோ ஒருவர் பேசியதாகவும் அது சரிதான் என்று சு.வெங்கடேசன் பேசியதாகவும், ஒரு செய்தியை உலவவிட்டிருக்கிறார்கள். அப்படி ஒருபோதும்அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டதில்லை.இப்படிச் சொல்பவன் எவனாக இருந்தாலும் கடைந்தெடுத்த முட்டாளாகவும் அயோக்கியனாகவுமே இருக்க முடியும். இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புவது எந்த வகையிலும் நியாயமாக இருக்கமுடியுமா? பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான சீனிவாசன், இப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இப்படி பேசுவதற்கு முன்பு அதற்குஆதாரம் எதுவும் இருக்கிறதா என்றுபார்க்க வேண்டாமா? இப்படி எந்தவிதஆதாரமுமின்றி, பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் மீது யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அவதூறுகளை அள்ளித் தெளிக்க முடியுமென்றால், அவருக்கான பாதுகாப்பு என்ன என்ற கேள்விஎழுகிறது. இப்படி பொய்களையும் அவதூறுகளையும் உருவாக்குவதும், பரப்புவதும் அந்த பொய்ச் செய்திகளை வைத்துக் கொண்டே எதிராளிகளை வீழ்த்திவிட முடியும் என்று, ‘‘நமோ வாரியர்ஸ்’’ என்ற பெயரில் ஒரு கும்பலை உருவாக்கியிருக்கிறார் கள். இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புபவர்கள், தங்களது பெயரோடு அல்லது அடையாளத்தோடு இருக்கக்கூடிய முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. அப்படி பதிவிட்டால் சிக்கிக்கொள்வார்கள். எனவே தங்களது முகத்தை மறைத்துக்கொண்டு ஒளிந்து ஒளிந்து போலி பெயர்களில் இத்தகைய இழி காரியத்தை செய்கிறார்கள். ஆனால் இவர்கள் பரப்பும் இந்த இழிவான, அவதூறு செய்திகள் பல வாட்ஸ்அப்குரூப்களில் வலம் வருகிறது. அதைப் பார்த்து பதறிப்போய் பலர் எங்களிடம் முறையிடுகிறார்கள். உங்கள் வேட்பாளர் இப்படிச் சொன்னாரா என்று கேட்கிறார்கள்.



இப்படி எங்கள் வேட்பாளரல்ல; எங்களது கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு தோழரும் கூட பேச மாட்டார்கள் என்று விளக்கம் அளித்த பிறகு, எங்கேயும் அதற்கான ஆதாரம் கிடைக்காத நிலையில், இதுஆதாரமற்றது; அவதுறானது என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். இது எந்த வகையிலும் நியாயமற்றஅணுகுமுறை. தேர்தல் ஆணையத்தில்இதுகுறித்து புகார்கள் அளித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் கவனிப்பதாகசொல்லியிருக்கிறது.இத்தகைய அவதூறுகளை யார் பரப்பினாலும் அதை நிராகரிக்க வேண்டுமென்றுகேட்டுக் கொள்கிறோம். மேலும், சு.வெங்கடேசன் சொல்லாதஒன்றை சொன்னதாகக் கூறி பொய்யையும்அவதூறுகளையும் பரப்பும் நபர்கள் நாளெல்லாம் இதே வேலையாக இருக்கிறார்கள். வழக்கமாகவே இதுபோன்ற பொய்ச் செய்திகளை உருவாக்கி உலவவிடுகிற இழி நபர்கள் இப்போது கொஞ்சம்ஓவர் டைம் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண் டிய ஒன்று. மிக மோசமான வன்மத்துடன் கூடிய ஒன்று. வாக்காளர்கள் இத்தகைய அவதூறுகளை நிராகரித்து அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.


க.கனகராஜ்


;