election-2019

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- விஞ்ஞான சாதனைகளை விமர்சிப்போரை மக்கள் தண்டிக்க வேண்டும்.


ச.சா - விஞ்ஞான சாதனைகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த நினைக்குறவங்கள என்ன பண்றது..??


கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் :- கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்.


ச.சா - அஞ்சு வருஷம் ஆட்சில இருந்தப்ப ஆரம்ப கட்ட வேலையாச்சும் பாத்துருக்கலாமே..??


மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பது மகா கூட்டணியே அல்ல.


ச.சா - புலனாய்வு அமைப்புகள பயன்படுத்தி, மிரட்டிக் கூட்டணி அமைக்குறதுதான் மகா கூட்டணியோ..??


தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :- கடந்த தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வென்று அதிமுக சாதனை படைத்தது.


ச.சா - ஜெயிச்ச சாதனை இருக்கட்டும்.. அஞ்சு வருசத்துல மக்களுக்காக செஞ்ச சாதனை என்ன..??

;