election-2019

img

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பாபர் மசூதி இடித்ததில் பெருமை அளிக்கிறது என சர்ச்சை பேச்சை கிளப்பிய மத்தியப்பிரதேச பா.ஜ.க நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுவரும் நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் ஓட்டுகளை கவர பல சர்ச்சை பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்கூர் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் பாபர் மசூதியை இடித்ததற்கு நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? இடித்ததில் தனக்கு பெருமை என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


இதனையடுத்து போபால் மாவட்ட தேர்தல் அதிகாரி இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு தலைமை காவலருக்கு சாபமிடுவதாக கூறிய காரணத்திற்காக தேர்தல் ஆணையம் சாத்விக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது அவர் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தால் கண்டிக்கப்பட்டுள்ளார்.


;