election-2019

காஷ்மீர் முதல் கர்நாடகா வரை 2ஆம் கட்டத்தேர்தல்

புதுதில்லி, ஏப். 18-இந்தியா முழுவதும், ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல், ஏப்ரல் 18 வியாழனன்று உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஜம்மு-காஷ்மீர், அசாம், சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை நாகினா, அம்ரோஹா, புலந்த்ஷார், அலிகார், ஹத்ராஸ், பதேபூர் சிக்ரி, மதுரா, ஆக்ரா ஆகிய 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. கர்நாடக மாநிலத்தில் மத்தியப் பகுதி மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 14 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ஜல்பைகுரி, டார்ஜிலிங் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி இங்கு 17 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர், உதம்பூர் மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

;