election-2019

img

பொய்களை மட்டுமே பேசும் பிரதமர் மோடி-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, ஏப். 2 -


பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திங்களன்று (ஏப்.1) கண்ணகி நகரில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு: மோடி அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அதை மறைக்க, அரசுக்கு அறிக்கை தயாரிக்கின்ற அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதைக் கண்டித்து தேசிய புள்ளிவிபர ஆணையத்தில் தலைவரும், உறுப்பினரும் பதவி விலகி இருக்கின்றார்கள். அரசியலமைப்புச் சட்டத்தால் தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம், திட்டக் கமிஷன், புள்ளிவிபர ஆணையம், வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை போன்றவற்றை தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றார்.ராணுவத்தையும் மோடி விட்டு வைக்கவில்லை. அங்கே ரபேல் ஊழல் செய்தார். அண்மையில் நடந்த ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தைதன்னுடைய தேர்தலுக்காக பயன் படுத்துகின்றார்.


விஞ்ஞானிகளின் சாதனைகளையும் விட்டு வைக்காமல் அதையும் இப்பொழுது தேர்தலுக்காக பயன்படுத்துகிறார். பிரதமர் எதேச்சதி காரத்தோடு, சர்வாதிகாரியாக செயல்படுகின்றார். தினமும் ஓர் ஆயிரம் பொய்களைச் சொல்கின்றார். இங்கு இருக்கக் கூடிய உதவாக்கரைகள் அவருக்கு அடிபணிந்து கூனிக்குறுகி மண்டியிட்டு தமிழகத்தை அடமானம் வைக்கக்கூடிய ஆட்சியை நடத்துகிறார்கள்.பிரியாணி கடையில் புகுந்து திமுக நபர் ஒருவர் கலாட்டா செய்த தகவல்கிடைத்ததும் அவரை கட்சியில் இருந்துநீக்கினோம். ஆனால் பொள்ளாச்சியில் ஏழு வருடமாக ஒரு அக்கிரமம் நடந்துள் ளது. அதுகுறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்? உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் பிறக்கவில்லையா? இந்தச் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இந்த ஆட்சி போன பிறகு உண்மை வெளிவரும். அப்பொழுது உரிய நடவடிக்கைக்கு ஆளாவீர்கள்.2014 தேர்தல் நேரத்தில் ஒரு வாரம் ஓ.பி.எஸ் எங்கிருந்தார்? கொடநாட்டில் பூட்டி வைத்து அடித்து மிரட்டி, யார் யாருக்கு எங்கு எங்கு சொத்துக்கள் இருக்கின்றன? எங்கெங்கு ஊழல் நடந்து இருக்கின்றது என்று ஜெயலலிதா எழுதி வாங்கினார். ஜெயலலிதா இறந்ததும்ஆதாரங்களை கைப்பற்ற ஜெ-வின் டிரைவராக இருந்த கனகராஜை பயன்படுத்தினார்கள்.


அவர் ஏற்பாட்டில் கேரளாவிலிருந்து வந்த 11 பேர் கொண்ட கூலிப்படை வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. அதை அங்கிருந்த வாட்ச்மேன் தடுத்ததால் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு மேலும் நான்கு கொலைகள் நடந்தன? திடீரென்று ஒருநாள் கனகராஜ் தற்கொலை, அடுத்து சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை என 15 நாட்களில் அடுத்தடுத்து மர்மமாக நடந்தது. இதன்பிறகு கூலிப்படையில் இடம் பெற்றிருந்த சயனையும் கொலை செய்ய விபத்து ஏற்படுத்தினார்கள். அதில் அவர் உயிர் பிழைத்தார். அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் இறந்து போனார்கள். இவை அனைத்தையும் ஊடகங்களில் சயன்தான் சொன்னார்.முதலமைச்சராக இருந்தபொழுது சிபிஐ விசாரணை கேட்காத ஓபிஎஸ் பதவி போனதும் கேட்டார். 40 நாடாளு மன்ற தொகுதிகளிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெல்வோம். வெற்றி பெற்றதும் அடுத்த நொடி இந்த ஆட்சி போகும். ஜெய லலிதா மர்ம மரணம் குறித்து விசார ணை நடத்தப்படும்.உடலில் இரண்டு கட்டிகள் வந்தால் அறுவை சிகிச்சை செய்து இரண்டை யும் அகற்ற வேண்டும். இல்லாவிடில் உயிருக்கே ஆபத்தாக மாறும். அது போல்தான் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. எனவே, இந்த இரண்டு கட்சியையும் அப்புறப்படுத்துவோம்.சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தகவல் தொழில நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும், குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு, சம வாய்ப்பு, சம ஊதியம் கிடைக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். தகவல் தொழில்நுட்ப பணி யாளர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய மாநில அளவில் தொழிலாளர் துறை கம்பெனி பிரதிநிதி கள் மற்றும் அலுவலர் அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் போன்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தென்சென்னையின் வெற்றி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்திற்கு திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி,ஜெ.அன்பழகன், சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை, காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பேசினர்.

;