கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி எல்லோரும் வாக்களித்துவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கும் போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என பிரச்சனை ஆனது. ஆனால் அதன்பின் ஏகப்பட்ட வேலைகளுக்கு பின் வாக்களித்துவிட்டேன் என தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்தார்.
ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் எப்படி வாக்களித்தார் என கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.