நகர்ப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த
தற்போது திணிக்கப்பட்டுள்ள சொத்துவரி சீராய்வினை விலக்கிக் கொண்டு நியாயமான அளவுகோல்களை உருவாக்குவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மன்றங்களில் விவாதித்து, மக்கள் கருத்தறிந்து, நியாயமான வரி நிர்ணயம் செய்வது நகர்ப்புற ஏழைகள், குடிசைவாழ் மக்கள் மற்றும் சாதாரண நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மையமாக வைத்து, நகர்ப்புற மேம்பாட்டுக் கொள்கைகள், நகர்ப்புற வடிவமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது, நகரங்களின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, பெருகி வரும் சுகாதாரக் கேடுகளை போக்குவதற்கும், மேம்பட்ட பாதாளச் சாக்கடை வசதி, நகர்ப்புற நீர்நிலைகளை பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, முறையான திடக்கழிவு மேலாண்மை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது
நகர்ப்புற சீர்திருத்தங்கள், திட்டங்களை மேற்கொள்வதில் ஜனநாயக ரீதியான விவாதம், மக்கள் பங்கேற்பு, வெளிப்படைத் தன்மை போன்ற நெறிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது இயற்கை பேரிடர் போல அரசின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் உருவாக்கும் செயற்கை பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் ஏழை-எளிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது
உள்ளாட்சி நிர்வாகம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்துவது
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி, அதிகாரம் மற்றும் ஊழியர்கள், வெளிப்படை தன்மையுடன் செயல்பட கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மக்களின் ஒப்புதல் பெறப்படுவது, நகர்ப்புறங்களில் வார்டு அடிப்படையிலான மக்கள் கூட்டங்கள் நடத்துவதைக் கட்டாயமாக்குவது.
உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தனியான ஆணையம் அமைப்பது
கிராமப்புற - நகர்ப்புற சிறிய நடுத்தர கட்டுமான பணிகளை காண்ட்ராக்டுக்கு மட்டும் விடாமல் மக்கள் பங்களிப்போடு, வாய்ப்புள்ள இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிட, உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படுவது
குடியிருப்பு மற்றும் மனைப்பட்டா
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்குவதை எளிமைப்படுத்துவது, ஏற்கனவே பலவகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது
சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், கேரளத்தைப் போன்று இலவச வீடு கட்டித் தருவது
சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் வாழும் குடிசைப் பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது
மொத்தத்தில் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க குரல் கொடுப்பது
உணவு பாதுகாப்பு
ரேசன் பொருள் மானியங்களுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நேரடி பணப்பட்டுவாடா முறையை ரத்து செய்து, எரிவாயு உள்ளிட்ட பொருட்களைக் கடந்த காலம் போல மானிய விலையிலேயே வழங்குவது; பொதுவிநியோக முறையை வலுப்படுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்
வேலை தேடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் போன்ற நலிந்த பிரிவினருக்கு விலையில்லா உணவு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்
நீராதாரம் மற்றும் நீர்நிலை பராமரிப்பு
முறையான தேசிய தண்ணீர் கொள்கை உருவாக்கப்பட்டு, தண்ணீர் விற்பனைப் பொருள் என்றிருக்கும் நிலையை மாற்றி, அரிதான பொது சொத்தாக அறிவிப்பது; அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை ஏற்பாடு செய்வது
தண்ணீரை படிப்படியாக தனியார்மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது
நிலத்தடி நீர் வரைமுறையற்று உறிஞ்சப்படுவதைத் தடுப்பது; நீராதாரத்தைப் பெருக்க பல்முனை நடவடிக்கைகள் எடுப்பது
நீர்நிலை பராமரிப்புக்குப் பொருத்தமான திட்டங்களை உருவாக்குவது
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஊக்குவிப்பது
கல்வி
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வற்புறுத்துவது, இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றிட போராடுவது; உயர் நிலை கல்விக்கு பிறகு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான சேர்க்கை வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் விடுவது
மனித நேயம், மத நல்லிணக்கம், ஜனநாயகம், சமூக நீதி, நாட்டுப்பற்று, பாலியல் சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை மாணவ சமூகத்திடம் உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களிலும், ஆசிரியர் பயிற்சியிலும் உரிய மாற்றங்கள் செய்வது
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கமளிப்பது; ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொடுப்பது
கல்வி பெறும் உரிமைச்சட்டம் 2022க்குள் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருவது; அதன் படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டை ஒற்றைச்சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது; 3 முதல் 18 வயதான அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமுடைய முன்பருவக் கல்வியும், மேல்நிலைக் கல்வியும் அளிக்கப்படுவது, ஆரோக்கியமான குழந்தைப் பருவத்தை உறுதி செய்திட தரமான, ஊட்டச்சத்துள்ள உணவு 2 வேளை வழங்குவது
மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் கல்விக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவிகிதமாக அதிகரிக்கப்படுவது
அருகமை பள்ளிகளை முறையாகத் துவக்கி, பொது கல்வி முறைக்கு முன்னுரிமை அளிப்பது
9ம் வகுப்பு முடிய மாணவர்கள் பொதுத் தேர்வு இல்லாமல் (No Detention Policy) தடையின்றி தேர்வு செய்யப்படுவது; உயர்நிலை பள்ளி துவங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனநல/கற்றல் பிரச்சனைகளுக்கான ஆலோசகர்கள் கட்டாயமாக நியமிக்கப்படுவது
சமச்சீர் கல்வி என்பது பாடத்திட்டம் என்று மட்டும் குறுக்கப்படாமல், கட்டமைப்பு வசதிகள், மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம் போன்றவை உட்பட பொதுப்பள்ளி கல்வித்திட்டம் என்பதை முழுமையான பொருளில் அமலாக்குவது, அனைத்துப்பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைப்பது
தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச விடுதிகளை மேம்படுத்தவும், உணவு மானியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது; மொழிவழிச் சிறுபான்மை மக்களுக்காக உள்ள கல்வி நிலையங்களை முறையாக நடத்துவதோடு தேவைக்கேற்ப கூடுதல் கல்வி நிலையங்கள் துவக்கப்படுவது, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்வது
தனியார் உயர்கல்வி நிறுவனங்களை சமூக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கல்வித்தரம், கட்டணம் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது
பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு தேர்வும், நியமனமும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் புதிய விதிமுறைகள் வகுப்பதுn மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி, நிபந்தனையின்றி, உரிய காலங்களில் வழங்குவது, பாரத ஸ்டேட் வங்கி தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வசூல் செய்யும் தற்போதைய முறையை ரத்து செய்வதுn மலைவாழ் மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கிராமங்களில் கூடுதலான பள்ளிகள் துவக்குவது n தொடக்கக் கல்வி துறையை மேம்படுத்த, அதனைத் தனி துறையாக்குவது, அதன் செயல்பாட்டை முடக்கும் அரசாணை எண் 101ஐ ரத்து செய்வது; 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை/மேல் நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியைக் கை விடுவது
போஸ்ட் – மெட்ரிக் கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படுவது, தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவையை விரைந்து கொடுக்க வலியுறுத்துவது
கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்துவது, கல்விநிலையங்கள் மதச்சார்பற்று இயங்குவதை உறுதி செய்வது, வணிக ரீதியிலான சுரண்டலை ஒழிப்பது, மாணவர் - ஆசிரியர் இடையில் ஜனநாயக வெளி அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது; பாடத்திட்டத்தில் மத வெறி கருத்துக்களை அகற்றுவது; பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பாலின நிகர்நிலை குழுக்களை அமைப்பது; மாணவர் பேரவை தேர்தல்களை முறையாக நடத்துவது
எம்.சி.ஐ, யு.ஜி.சி உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துவது, நமது அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சித்தன்மையை பாதுகாக்கும் வகையில் மாநில உரிமைகளுக்கு ஏற்ப மேற்கண்ட அமைப்புகளை கட்டமைப்பது.
வேலைவாய்ப்பு
சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்ற அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 2 லட்சம் பணியிடங்களும் அந்தந்த தேர்வு வாரியங்கள் மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், லஞ்ச ஊழலற்ற நேர்மையான முறையில் நிரப்பப்பட அழுத்தம் கொடுப்பதுn பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வரும் போது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வது
வேலைவாய்ப்புகளை அளிக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாப்பது
சுய தொழில் துவங்க கடன் அளிப்பதை எளிமைப்படுத்துவதுn மத்திய அரசுசார் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கும் போது, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைப் போல் நகர்ப்புற ஏழைகளுக்கு ‘நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்’ உருவாக்கப்படுவது
சுகாதாரம்
இலவச மருத்துவம் கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் முறையான சட்டங்களை இயற்றுவது; அரசின் நிதி ஒதுக்கீடு ஜிடிபியில் 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவது
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உறுதியான நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைந்து முடிப்பது; மதுரை-கோவை-நெல்லையில் மண்டல புற்றுநோய் மையங்களை உருவாக்குவதுn ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, பலப்படுத்துவது
நோய் வந்த பின் நடக்கும் அதிக பண செலவு பிடிக்கும் சிகிச்சை முறைக்கு பதிலாக மலிவான முறையில் செய்யக் கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது
தற்போதுள்ள அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் தனியார் காப்பீடு மற்றும் மருத்துவமனைகளுக்கே லாபம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. பொது மருத்துவ முறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்கு அதிகம் பயன் தரும் என்பதை முன்வைப்பது
தனியார் துறையில் கூட சிறிய, நடுத்தர மருத்துவமனைகள் அல்லாமல், பெரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அமைய வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, தனியார் மருத்துவமனைகள் குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சிகிச்சைக்கான கட்டணங்கள், சிகிச்சை குறித்த வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்துவது; பதில் சொல்லும் கடமையை உறுதிப்படுத்துவதுn அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்து, மலிவு விலை அரசு மருந்தகங்களை ஏற்படுத்த முயற்சிகள் எடுப்பது, பிராண்ட் மருந்துகளுக்கு பதிலாக மருத்துவர் ஆலோசனை அடிப்படையில் ஜெனரிக் மருந்து விற்பனையை ஊக்கப்படுத்துவது
இந்திய மருத்துவக் கழகத்தை சீரமைத்து செயல்பட வைப்பது,அதற்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது; அதற்கு பதிலாக உருவாக்கப் பட உள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்வது
மின் துறை
மின் துறை பொது துறையாகப் பராமரிக்கப்படுவது; பிரித்த மின்வாரியங்களை ஒன்றிணைப்பது
மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ ரத்து செய்வது
அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மின்சாரம் கிடைப்பதற்கு அழுத்தம் கொடுப்பது
மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மின் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்குவது
சுற்றுச்சூழல்
தெளிவான சுற்றுச்சூழல் கொள்கைக்கான முன்வரைவு உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பரந்த விவாதத்துக்குப் பின் இறுதி செய்து அமலாக்குவது
சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலை நிரந்தரமாக்க உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்தம் அளிப்பது
சுற்றுச்சூழல் பாதிப்பைக் கணக்கில் எடுத்து, நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து முறையை மேம்படுத்துவது
கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை ரத்து செய்ய குரல் கொடுப்பது
ஆலைக்கழிவுகள் கால்வாய்களில் கலப்பதை தடுப்பது
ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுகிற மாவட்டங்களில் புதிய தொழிற்சாலை துவக்கும் முன் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்யும் விதியைக் கட்டாயமாக அமல்படுத்துவது
தொழிலாளர் நலன்
விலைவாசி கணக்கில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கிட நடவடிக்கைஎடுப்பது
தொழிற்சங்க உரிமைகள் மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளை நிறுவனங்கள் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வது, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்டுவது
முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் நலவாரியங்களும் முறையாக செயல்படவும், பலன்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் போய் சேரவும் நடவடிக்கைகள் எடுப்பது, கண்காணிப்பதுn பல்வேறு பகுதியினரை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை அடியோடு ரத்து செய்வது, அதே போல் தொழிலாளர் நலனை பாதிக்கும் வகையில் செய்யப்பட்ட அனைத்து சட்ட திருத்தங்களை ரத்து செய்ய நிர்ப்பந்திப்பது
அரசு துறைகளிலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது, ’குறிப்பிட்ட கால வேலை’ (Fixed term employment) முறையை ரத்து செய்வது.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொழிலாளர் சட்ட மசோதாவை ரத்துசெய்வது
பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம், பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, பேறுகால விடுப்பு, ஓய்வு நேரம், கழிப்பிட வசதி போன்றவை உறுதி செய்வது; பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடை செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல், புகார் கமிட்டிகளை அமைத்தல்n பஞ்சாலைகளில் நவீன கொத்தடிமை முறையாக உள்ள சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பது n சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது
வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்களைக் கேரள மாநிலம் போல் உருவாக்குவது, வெளிமாநில தொழிலாளர்களின் வருகையைப் பதிவு செய்து, ரேஷன் உள்ளிட்ட உதவிகளை செய்வது, பணியிட விபத்துகளுக்கு சட்டப்படியான இழப்பீடு அளிப்பது
வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் கவனம் செலுத்துவது
ஐ.டி. ஊழியர்களின் பணி பாதுகாப்பு, அரசு துறைகளில்/ இ-சேவை, ஆதார் சேவை மையங்களில்/தனியார் துறையில் பணியாற்றும் தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.24000 என நிர்ணயிக்கப்படுவது, சட்ட விரோதமான பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் போதே பணப்பலனை நிலுவை வைக்காமல் வழங்குவது; அவர்களின் ஓய்வூதிய நிதியில் அரசு செலவழித்த தொகையை உடனே செலுத்துவது
விவசாய தொழிலாளர் நலன்
விவசாயத் தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பை சட்ட அங்கீகாரத்துடன் உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த மத்திய சட்டம் இயற்றிட வலியுறுத்துவது
ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலையும், ரூ.400 குறைந்தபட்ச கூலியும் கிடைக்கும் விதத்தில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது, கூலி நிலுவையை உடனடியாக வழங்குவது
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ. 10,000/- வழங்குவதை உறுதி செய்வது
விவசாய விளை நிலம் வேறு பயன்பாட்டுக்கு செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளின் போது, நிலத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற முறையில் விவசாயத்தொழிலாளர், பெண்களையும் இணைத்து இழப்பீடு வழங்குவது
பெண்கள் நலன்
பெண்கள், குழந்தைகள் நலத்துறை மத்தியில் ஒரே துறையாக இருப்பதை மாற்றித் தனித் தனி துறைகளாக செயல்படுத்துவது
தேசிய, மாநில மகளிர் ஆணையம், குழந்தை உரிமை ஆணையத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, அவை முறையாக இயங்கவும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது, பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ((Action Taken Report)) சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது; பெண்கள், குழந்தைகள் உரிமை குறித்த முற்போக்குக் கண்ணோட்டமும், அனுபவமும் உள்ளவர்களை ஆணைய பொறுப்புகளுக்குக் கொண்டு வருவதுn பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு, மகளிர் உரிமை, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, பாலின நிகர்நிலை கண்ணோட்டம் குறித்து தொடர் பயிற்சியளிப்பது
பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு/உரிமைகளுக்கான சட்டம் (Victims Rights/Protection Act), திருமணத்துக்குப் பின் சேரும் சொத்துக்களில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க சட்டம் இயற்றுவது; ஜீவனாம்ச சட்டத்தை பலப்படுத்துவது; கணவனால் கை விடப்படும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வது; இபிகோ 498 ஏ பிரிவை நீர்த்துப் போகாமல் பாதுகாப்பதுn பாலியல் வன்முறை மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு முழுமையான நிவாரணம், மறு வாழ்வு உறுதி செய்வது
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதைத் தடை செய்யும் சட்டத்தைக் கறாராக அமல்படுத்துவது; கண்காணிப்பு கமிட்டிகளை செயல்படுத்துவது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்குகளில் உயர்மட்ட நபர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிவிடாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுப்பது
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் வங்கிக் கடன் அளிப்பது, தனியார் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனுக்கு அதீத வட்டி வசூல் செய்வதையும், அச்சுறுத்தல், மிரட்டலையும் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது; தற்போது கஜா புயல் பாதித்துள்ள மாவட்டங்களிலும், தொழில் நசிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களிலும் கடனை ரத்து செய்வதுn நலத்திட்ட உதவிகளை உயர்த்தி, குறைபாடின்றி வழங்குவது; வன்முறை தடுப்புச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்துவது, புதிய சட்டங்கள் குறித்து விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது
பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசுவதை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நடத்தை விதி மீறலாகக் கருதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வது
பெண்கள் குறித்த ஊடக சித்தரிப்பில் படைப்பாளிகள் சுய கட்டுப்பாடு கடைப்பிடிப்பதை ஊக்குவித்தல்; பாலின சமத்துவ சித்தரிப்புகளை அதிகம் கொண்டு வருதல்
மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகளில் பெண்களுக்கான சிறப்பு கூறு இருப்பதை உறுதி செய்வது (gender budgeting) அதைத் தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்துவது
விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான பென்சன்/உதவித்தொகையை விலைவாசிக்கேற்ப உயர்த்தி மாதந்தோறும் தடையின்றி வழங்கிட போராடுவது