election-2019

கல்வியை கடைசரக்காக்கி – உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டீன் டீன் டீன் னா

கல்வியை கடைசரக்காக்கி – உயர் 

கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 


டீன் டீன் டீன் னா 

வழங்கி வந்த நிதி உதவி

ரத்து செய்து நாசமாக்கினான்

டீன் டீன் டீன் னா

ஐடிபிஎல் வங்கி திவால்

அதை பாதுகாக்க 

டீன் டீன் டீன் னா

ஏழையின் இதயத் துடிப்பு எல்.ஐ.சி. 

நிதியை எடுத்துப் போட உத்தரவு

டீன் டீன் டீன் னா

கடைத்தேங்காய் எடுத்து

வழிப்பிள்ளையாருக்கு உடைப்பு

டீன் டீன் டீன் னா

அம்பானிக்கும் அதானிக்கும் 

கார்ப்பரேட் முதலாளிக்கும்

டீன் டீன் டீன் னா

இரண்டு இலட்சம் கோடிரூபாய்

கடன் தள்ளுபடி செய்தார் மோடி

டீன் டீன் டீன் னா

விவசாயிகளுக்கு எழுபத்தைந்தாயிரம்

கோடிரூபாய் தள்ளுபடிக்கு மறுக்குது

டீன் டீன் டீன் னா

ஸ்விஸ் வங்கியில் உள்ள 

கருப்பு பணத்தைக் கொண்டு வந்து

டீன் டீன் டீன் னா

ஒவ்வொருவர் வங்கி கணக்கில்

பதினைந்து இலட்சம் போடுவேன் என்றார்

டீன் டீன் டீன் னா

வங்கி வாசல் மிதியாத 

பலகோடி மக்கள் கணக்கை தொடங்க

டீன் டீன் டீன் னா

வங்கிகள் பலகோடி ரூபாய்

ஈட்டியது மோடியின் ஜாலத்தால் 

டீன் டீன் டீன் னா

சேற்றில் சிக்கிய கொக்காய்

நிதிநிலை நெருக்கடி பார்

டீன் டீன் டீன் னா

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு

இருபத்தி எட்டு சதம் 

டீன் டீன் டீன் னா

உலக நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி

சொற்பம் பதினைந்து சதமாம்

டீன் டீன் டீன் னா

நாடுபோற போக்கப் பாரு

நாலுகாசு கையிலில்லை

டீன் டீன் டீன் னா

நின்னா வரி நடந்தா வரி

குந்துனா வரி குனிந்தால் வரி

டீன் டீன் டீன் னா

பட்டை நாமம் போட்டு வந்து

வெட்ட வெளி கொட்டிலாக்கிட்டான்

டீன் டீன் டீன் னா

பாழாய் போன பாரதத்தை

சோலைவனமாக்கிட 

டீன் டீன் டீன் னா

நாளை நடக்கும் பாரதபோரில்

சங்கு ஊதி சாமுண்டி அடித்து

டீன் டீன் டீன் னா

சங் பரிவார கூட்டத்திற்கு – மக்கள்

சவப்பாடை கட்டிடும்.

டீன் டீன் டீன் னா…


தஞ்சை கா.அபிமன்னன்