election-2019

img

கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றத்தை நோக்கி நடைபோட்ட பாமக

கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றத்தை நோக்கி நடைபோட்ட பாமக, அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது (4.5.16) ஓசூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் அன்புமணி பேசுகையில்,“இப்ப என்ன இந்த மேடையில என்னன்னு கூப்டாங்க? அன்புமணி. இப்படி தான் கூப்பிடனும். புரட்சி, புரட்சின்னு சொல்றாங்க. புரட்சி என்ற வார்த்தையே அசிங்க மான வார்த்தையா போச்சு.புரட்சித்தலைவர் (எம்ஜிஆர்) என்னையா புரட்சி பண்ணாரு? நாலு சினிமால நடிச்சிட்டா அது புரட்சியா? உடனே அவரு புரட்சித் தலைவரா?சினிமாக்கார இப்படி தலையில தூக்கி வச்சு, வச்சு தான் நீங்க நாசமா இருக்கிறீங்க. தமிழ்நாடும் நாசமா போயிட்டு இருக்கு.அதுக்கப்புறம், இந்த அம்மா வந்தாங்க. அவங்க புரட்சித் தலைவி.அங்க என்ன புரட்சி பண்ணாங்க? சினிமால அவர்கூட (எம்ஜிஆர்) நடிச்சாங்க. அதனால் நீங்க புரட்சித் தலைவி ஆயிட்டீங்க.ஆனா, மக்களுக்கு என்ன புரட்சி பண்ணிங்க?


இன்னொருத்தரு வந்தாரு. அவரு புரட்சிக் கலைஞனாம்?ஆமாம், அவர (விஜயகாந்த்) பத்தி பேசவே தேவையில்ல. அது முடிஞ்சு போச்சு”! என முழங்கினார்.அது ஒரு காலம்.அரசியல் தொடர் தோல்வியால் விரக்தியின் விளிம்பில் இருந்த பெரிய அய்யா மருத்துவர் ராமதாசு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவை ‘தெருச் சண்டைக்கு’ இழுப்பது போல் வம்பு இழுத்தார். அதன்விளைவு ராமதாசு கைதுசெய்யப்பட்டார். பிறகு விடுதலை வேண்டி தமதுமனைவியை அனுப்பி மண்டியிட்டார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைச்சர்கள் 24 பேர் மீது மிகப்பெரிய ஊழல் பட்டியல்தயார் செய்து ஆளுநரிடம் கொடுத்தசின்ன அய்யா, எடப்பாடி தலைமை யிலான அதிமுக அரசு தமிழ்நாட்டை சீரழித்துவிட்டது.பாமக மட்டுமே தமிழகத்தை காப்பாற்றப் போகிற கட்சி என்று சவடால் அடித்துக் கொண்டிருந்தார். இப்போது, அந்த அதிமுக, தேமுதிக-விடம் கூட்டணி சேர்ந்து தில்லி கோட்டைக்கு போக முயற்சிக்கிறார்.


சி.ஸ்ரீராமுலு