election-2019

பாமகவுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா?

எடப்பாடியைப் பொறுத்தவரையில் கமிசன் – கரெப்சன் – கலெக்சன். அவர்மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை. உதாரணமாக ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னால், சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்காக ஒரு காண்ட்ராக்டை விட்டு அதில் 1000 கோடி ரூபாய் கமிசன் அடிக்க திட்டமிட்டார் எடப்பாடி. அதை நிறைவேற்றுவதற்காக, விவசாயிகளின் நிலங்கள் எல்லாவற்றையும் அவர்களை அடித்து, துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி, மிரட்டி, அச்சுறுத்தி அந்த நிலங்களை அபகரித்த கொடுமை எல்லாம் நடந்தது. நான்சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பினேன்.ஏற்கனவே, சென்னைக்கும் சேலத்திற்கும்ஒரு மிகப்பெரிய சாலை இருக்கின்றது இருந்தாலும் புதிதாக சாலை போடவேண்டும் என்பது அவசியம் தேவை தான். நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அது விவசாயிகளுக்கு பாதிப்பு வராத வகையில், விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாத சூழ்நிலையில் அது இருக்க வேண்டும் என்றுபலமுறை நான் சட்டமன்றத்தில் பேசிஇருக்கின்றேன். அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளை அழைத்து கோட்டையில் உட்கார வைத்து முதலமைச்ச ராக இருக்கக்கூடிய எடப்பாடி அவர்கள் பேசவேண்டும், அவர்களை சமாதானம் செய்ய வேண்டும், அல்லது அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அந்தப் பணி நடக்க வேண்டும் அல்லது மாற்று வழியை உருவாக்கவேண்டும் என்றெல்லாம் நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசியிருக்கின்றேன்.அது மட்டுமல்ல, இன்றைக்கு அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்து இருக்கக்கூடிய கட்சியைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்தக் கட்சி, 8 வழிச்சாலை போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. நேற்றைய தினம், நீதிமன்றத்தில் இருந்து 8 வழிச்சாலை போடக்கூடாது என்று தீர்ப்பு வந்தது. அதற்காக இந்த அரசைக் கண்டிக்கிறோம் என்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு குறித்து அரசுஎன்ன சொல்லி இருக்கின்றது? முதலமைச் சர் இன்னும் வாய் திறந்து பதில் சொல்ல வில்லை. ஆனால், பால் வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ராஜேந்திர பாலாஜி மேல் முறையீட்டிற்கு போவோம் என்று சொல்லிஇருக்கின்றார். எனவே, மேல் முறையீட்டிற்கு போகப் போகிறார்கள்.


நான் இன்னும் கேட்கின்றேன்! இன்றைக்கு (தருமபுரி தொகுதியில்) நம்மை எதிர்த்து போட்டியிட்டு வேட்பாளராக நிற்கக்கூடியகட்சியின் சார்பில் (பாமக) ஒரு அறிவிப்பை யும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவர்கள் கூட்டணியில் சேரும் பொழுது 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுவது சம்பந்தமாக அவர்களை வற்புறுத்தி சொல்லியிருப்பதாக நமக்கு செய்தி. இப்பொழுது அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும், நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கின்றோம். நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல்முறையீட்டிற்கு போகக்கூடாது, நீதிமன்றம் தந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்ததெம்பு, திராணி, அருகதை, யோக்கியதை அவர்களுக்கு இருக்கின்றதா என்ற கேள்வி யைத் தான் நான் கேட்க விரும்புகின்றேன். இவர்களுக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.உதவாக்கரை என்றால் எதற்கும் பயனில்லாதது. மாநில முதலமைச்சரால் மக்களுக்கு பயனில்லை, விவசாயிகளுக்கு பயனில்லை, நெசவாளர்களுக்கு பய னில்லை, தொழிலாளர்களுக்கு பயனில்லை, இளைஞர்களுக்கு பயனில்லை, மாணவர்களுக்கு பயனில்லை, அரசு ஊழியர் களுக்கு பயனில்லை, நாட்டிற்கே பயனி ல்லாத ஒருவர் எடப்பாடி தான். ஆனால், கொள்ளையடிப்பதில், ஊழல் செய்வதில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது.தருமபுரியில் நம்மை எதிர்த்து போட்டி யிடக்கூடிய வேட்பாளர் யாரென்று உங்களு க்குத் தெரியும். ஏற்கனவே, இங்கிருந்து ஜெயித்துக்கொண்டு போனவர்தான். ஜெயித்துவிட்டுப் போனாரே தவிர இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை அவர். நாடாளுமன்ற எம்.பிக்களில் மிகவும் குறைவான நாட்கள் வந்தது யாரென்று பார்த்தீர்கள் என்றால் இவர்தான். 5 வருடம் சென்று பணியாற்ற வேண்டும். நாடாளு மன்றம் எப்போதாவது தான் கூடுகின்றது. அப்பொழுதுகூட அங்கு அட்டன்டன்ஸ் கிடையாது அவருக்கு. அங்கு சென்றாரே, அப்பொழுது தொகுதியைப் பற்றி பேசியிருக்கின்றாரா? தொகுதிக்கு ஏதாவது முன்னேற்றம் கொண்டு வந்திருக்கின்றாரா? ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கின்றாரா? எதுவும் கொண்டுவரவில்லை. அவர் கட்சிசார்பில்தான் ஒரு ஸ்டண்டிற்காக கோர்ட்டிற்கு சென்று வழக்கு போட்டார்கள். இப்பொழுது 8 வழிச்சாலை கிடையாது ரத்து என்று தீர்ப்பு வந்திருக்கின்றது.


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...