election-2019

துரோகமும் இரட்டை வேடமும்

மோடி அரசு மீண்டும் அமைந்தால்தான் காவிரிப் பிரச்சனை தீரும்...


கரூரில் தம்பிதுரை பிரச்சாரம்

- தமிழ் முரசு 9.4.2019


ஆட்சியிலிருந்த கடந்த 5 ஆண்டுகளும் காவிரிப் பிரச்சனை எந்தவிதத்திலும் தீர்வுகண்டுவிடக் கூடாது என்று ஓவர்டைம் வேலை பார்த்துக் கொண்டிருந்தது சாட்சாத் மோடி அரசு.காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையம் ஏன்அமைக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்விகேட்டுகெடு விதித்தபோதும், கொஞ்சமும் கலங்காமல் ‘கர்நாடகாவில் தேர்தல் வருகிறது (நாங்க ஜெயிக்கணும்)’ என்றுதில்லாக, தினாவெட்டாக சுப்ரீம் கோர்ட்டிலேயே மனு தாக்கல் செய்தது மோடி அரசு.


காவிரிக்காக மொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருந்த போது மௌன விரதம் அனுசரித்த மோடிஅரசு, ‘கண்காணிப்பு ஆணையம்’ என்றால் என்ன என்றுவிளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு போட்டுமேலும் சில மாதங்களை இழுத்தடித்தது.கஜா புயலில் காவிரி டெல்டா மாவட்டங்கள் சிதைந்துசின்னாபின்னமாகி மக்கள் பசியோடு பரிதவித்த போதும்,புதுதில்லியில் தமிழக விவசாயிகள் மாதக்கணக்கில் போராடிய போதும் ஏறெடுத்தும் பார்க்காமல் எள்ளி நகையாடியதுதான் மோடி அரசு.இதற்கெல்லாம் கிளைமாக்ஸாக, ஆந்திர மாநிலசிறப்பு அந்தஸ்து பிரச்சனை ஒட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்த போது, அது விவாதத்திற்கு வரக்கூடாது என்பதற்காக,மோடியின் உத்தரவின் பேரில், காவிரிப் பிரச்சனையைச் சொல்லி மக்களவையில் ரகளையில் ஈடுபட்டு,மோடி அரசுக்கு முட்டுக்கொடுத்தது அதிமுக. (அப்போதும் கூட காவிரி நதிநீர்ப் பங்கீடு கண்காணிப்பு ஆணையம் பற்றி எந்தவித உத்தரவாதமும் வழங்க மோடி அரசுமுன்வரவில்லை என்பது வேறு விஷயம்).தாங்களும் மோடி அரசுக்கு எதிராக இருப்பது போலகாட்டிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் அவ்வப் போது ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருந்த தம்பிதுரை, இப்போது மோடி மீண்டும் வந்தால்தான் காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்று மிரட்டுகிறார்.


ஆனால் தம்பிதுரையின் துரோகத்திற்கும், அதிமுக - பாஜக இரட்டை வேடத்திற்கும் தக்க பதிலடிகொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் கரூர் வாக்காளர்கள். தம்பிதுரையை ஓட ஓட விரட்டுவதற்கும் தேர்தல்நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.


- க.மன்னன்