election-2019

img

தெலுங்கானா: பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பறிமுதல்

தெலுங்கானாவில் பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் நாடுமுழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய மண்டல கமிஷனர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ரூ.8 கோடி ரொக்கப்பணம் இந்தியன் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட காரில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அந்த காரில் ஓட்டுநர் குடாசங்கர் மற்றும் தோஷரெட்டி, பிரதீப் ரெட்டி ஆகிய 3 பேர் இருந்தனர். அவர்களிடம் ரூ.2 கோடி ரொக்கப்பணம் இருந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் பாஜகவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக வங்கிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கோபி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.