india

img

பேத்தி பிறந்த நாளைக் கொண்டாடிய தெலுங்கானா பாஜக தலைவர்... கொரோனா விதிகளை மீறியதாக வழக்கு...

புதுதில்லி:
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் முஸ்லிம் பெரியவர் அப்துல்சமது தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மீது 6 பிரிவுகளில் கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ (Press Club Of India). இந்திய மகளிர் பத் திரிகையாளர்கள் சங்கம் (Indian Women’s Press Corps -IWPC) ஆகிய அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.டபிள்யூ.பி.சி, தலைவர் வினீதா பாண்டே மற்றும் பொதுச்செயலாளர் சுபர்ணா சர்மா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஜியாபாத் தாக்குதல் விவகாரத்தில், ‘டுவிட்டர்’, ‘தி வயர்’ உள்ளிட்ட ஊடகங்களின் பின்தொடர் தல் செய்திகள் மற்றும் டுவீட்டுகள்கள நிலவரத்தையே அடிப்படையாக கொண்டு இருந்தன. வெறுப் பைப் பரப்பும் நோக்கத்துடன் இல்லை. எனவே, அவற்றைப் பற்றிபேசுவது அல்லது பகிர்வது பொதுஒழுங்கிற்கான அச்சுறுத்தல் என்றுகூற முடியாது. ஆனால், ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அமைப்புகள் மீது காஜியாபாத் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதானது, தாக்குதல் சம்பவத்தை திசைத்திருப்புவதற்கும், ஊடகங்களை குழப்புவதற்குமான முயற்சியாகவே தெரிகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.“ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அமைப்புகளுக்கு எதிரான எப்ஐஆரை ரத்து செய்வதுடன், ஊடகங்களைப் பின்தொடர்வதற்கு நேரத்தையும் வளத்தையும் செலவழிப்பதற்குப் பதில், காஜியாபாத் காவல்துறை, குற்றத்தை விசாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்;தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல, பிரஸ் கிளப் ஆப்இந்தியா (PCI) தலைவர் உமகாந்த் லகேரா மற்றும் பொதுச்செயலாளர் வினய் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஜியாபாத் காவல்துறையினரின் எப்ஐஆர்ஆனது, ஊடகங்கள் மற்றும் சமூகத்தில் அரச பயங்கரவாதத்தை திணிக்கும் முயற்சியையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.