election-2019

img

‘நோ மோர் மோடி’... என்பதே முழக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் சனிக்கிழமை இரவு மாபெரும் கலைஞர்கள் சங்கமம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...

சாதாரண புண்ணுக்கு மருந்து தடவலாம். புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை அவசியம். ஆகவே, பரிச்சார்த்த முறையில் வாக்களித்துப் பார்ப்போம் என்று டிடிவியின் அமமுவுக்கோ, கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கோ, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ வாக்களித்துப் பயன் இல்லை. மீண்டும் இந்துத்துவா மதவெறியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் இருக்க முடியாது. எனவே, அறுவைச் சிகிச்சைக்கான ஒரே வழி தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதுதான். இன்றைக்கு நீதிமன்றம் தமிழின் பெருமையைப் பேசலாம். ஆனால், நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலைதான் உள்ளது. எங்கோ மறைந்து கிடந்த பறம்பு மலையின் பாரியை நமது வீட்டுக்கு அழைத்து வந்தவன் எழுத்தாளர் சு.வெங்கடேசன். தில்லியின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்துவிட்டோம். தமிழகத்தில் தெர்மாக்கோல் ஆட்சியையும் பார்த்துவிட்டோம். நமது வேட்பாளர் சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உண்மையான செங்கோல் ஆட்சிக்கு வழிவகுப்போம்.

-நந்தலாலா

தேர்தல் பிரச்சாரக்கூட்டமாக இதை நான் பார்க்கவில்லை. வெற்றிபெற்ற பிறகு நடக்கும் நன்றி அறிவிப்புக் கூட்டமாகவே எனக்குத் தோன்றுகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசும் நம்மை வீதிக்குத் தள்ளிவிட்டுள்ளனர். சினிமா பாடலாசிரியன் என்பதைவிட அடிப்படையில் நான் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் முன்னாள் நகரச்செயலாளரின் மகன் என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் பெருமை அடைகிறேன். சினிமாவில் 1500 பாடல்களுக்கும் மேல் எழுதி பிரபலமடைந்து இருக்கலாம். எனது வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்தது செங்கொடி இயக்கம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த வேட்பாளர்களின் பட்டியலை எடுத்தால் அதில் முதன்மையானவராக சு.வெங்கடேசன் இருப்பார். கவிதை, நாவல், கட்டுரை, அகழாய்வு என்பதைத் தாண்டி அவர் மிக நல்ல மனிதர். இவரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஏற்கனவே, இரண்டு, மூன்று முறை கம்யூனிஸ்ட்டுகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மதுரை மக்கள் வெங்கடேசனையும் நிச்சயம் அனுப்ப வேண்டும்.

- யுகபாரதி

கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் கலைஞர்கள் பக்கம் இருப்பார்கள். அதனால் கலைஞர்களும் கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் தான் இருப்பார்கள். கொடூரமான பாசிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. ஏன் மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பழங்குடிகள், விவசாயிகள், இஸ்லாமியர்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தலித் மக்களிடம் போய் கேளுங்கள். அவர்கள் பதில் அளிப்பார்கள். என்ன உணவு உண்ண வேண்டும். என்ன உடை உடுத்த வேண்டும் என்று புராண இதிகாச காலத்தில் இருக்கிற விலங்குகளைப் போல நாம் இந்த ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டோம். யாரும் அவதாரம் எடுத்து நம்மை மீட்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு சு.வெங்கடேசனுக்கு வாக்களிக்க மதுரை மக்கள் முன்வரவேண்டும்.

- இயக்குநர் கோபிநயினார்

அரசியல் தலைசுற்றல் கிறுகிறுப்புக்கு நாம் வைத்தியம் செய்தாக வேண்டியுள்ளது. நம் மக்களின் வலியை உணர்ந்தவர் சு.வெங்கடேசன். அந்த வலியை வெங்கடேசன் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு போகவில்லை என்றால் பிறகு யார் அங்கு வெளிப்படுத்துவார்கள்? நான் அவரின் தீவிர வாசகன். சக மனிதனின் வலியை உணர்ந்தவனால் தான் இந்த மண்ணின் தொன்மையை மீட்டெடுக்க முடியும். வைகை நதி பண்பாட்டை மீட்டெடுக்க முடியும். இன்றைக்கு கீழடியைப் பற்றி உலகம் பேசிக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வெங்கடேசன் தான் காரணம். அரசியலில் அறிவியல் தெரிந்த மனிதன் வெங்கடேசன். உங்கள் சக பயணிகளிடம் வாக்களிக்க கோருங்கள். உங்கள் குடும்பத்தில் வாக்கு கோருங்கள். இந்த நாட்டில் பீடித்திருக்கின்ற நோய்களை அகற்ற மறக்காமல் அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு வாக்களியுங்கள்.

- டாக்டர் சிவராமன்

ரூபாய் 15 லட்சத்தை நம் வங்கியில் காவலாளி போடுவார் என்று மக்கள் நம்பினார்கள். சென்ற முறை வளர்ச்சி என்றார்கள். இந்த முறை பாதுகாப்பு என்கிறார்கள். மோடியை பொறுத்தவரை தேசம் என்பது எல்லாம் நாட்டின் எல்லைக்கோடு தான். நம்மைப் பொறுத்தவரை தேசம் என்பது இந்த மண்ணும் மக்களும் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நான் உட்பட நம் பணத்தை எடுக்க முடியவில்லை. நாம் அனைவரும் அந்த நேரத்தில் பிச்சை எடுத்தோம். ரபேல் ஊழல் தொடர்பான பாரதி புத்தகாலயத்தின் புத்தகத்தை ஒரு ஆயிரம் பேர் தான் வாங்கியிருப்பார்கள். ஆனால் தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் இன்றைக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்துள்ளன. இந்த தேசத்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டம் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. அதை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த போது ஊழலை ஒழிப்போம் என்றார், கருப்புப்பணத்தை ஒழிப்போம் என்றார், தீவிரவாரதத்தை ஒழிப்போம் என்றார். இந்த 3ம் ஒழிந்திருக்கிறதா? மோடியின் பெயரில் பனியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவர்களுக்கு எதிராக அன்றைக்கு பேசிய முதல் ஆண்டி இண்டியன் பெரியார் தான். கோ பேக் மோடி என்று முன்பு கூறினோம். இப்போது நோ மோர் மோடி என்று கோசமிடவேண்டும்.

- நடிகர் ராமு