election-2019

img

பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என கூறியதற்காக உத்தரப்பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாமியார் முதல்வர் யோகி ஆதித்யனாத் இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் சேனை எனறார். இது இந்திய ராணுவத்தின் பணியை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதைத்தொடர்ந்து அவரின் பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராணுவ படைகளின் செயல்பாடுகளை அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவித்திருந்தது.


ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நேற்று மாலைக்குள் விளக்கமளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து தரப்பட்டதேர்தல் ஆணையம் அறிக்கையில், யோகி ஆதித்யனாத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள போதுமானதாக இல்லை எனவும், இனிமேல் பொதுமேடைகளில் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேசுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.