இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளருமான கம்பீர் மீது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குற்றம்சாட்டிள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
அண்மையில் பாஜகவில் இணைந்த கௌதம் கம்பீர் கிழக்கு டெல்லியில் அக்கட்சி சார்பில் போட்டிருக்கிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி போட்டியிடுகிறார். இந்நிலையில் கம்பீர் இரண்டு வாக்காளர் அட்டையை வைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிஷி.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்,
கிழக்கு டெல்லியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளேன் அவர் டெல்லியில் இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அட்டை வைத்திருக்கிறார். கரோல் மற்றும் ராஜிந்தர் நகரில் அவருக்கு வாக்காளர் அட்டை உள்ளது. இதற்கு சட்டப்பிரிவு 17ம் படி ஓர் ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.