election-2019

img

உ.பி. மாநிலத்தின் நுண்கிருமி ஆதித்யநாத்

லக்னோ, ஏப்.6-

காங்கிரஸ் கட்சி ‘முஸ்லிம் லீக்’ என்ற வைரஸ்பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், மத ரீதியான தாக்குதலை தொடுத்திருந் தார். இந்த பேச்சுக்கு பரவலான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்-தான், உண் மையான நச்சு வைரஸ் என்றும், தேர்தல் மூலம்இந்த வைரஸ் அகற்றப் படும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் ஆதித்யநாத் ஒரு ‘யோகி’ அல்ல, ‘போகி’ என்றும் ரன்தீப் சிங் சாடியுள்ளார்.