election-2019

ஏழைத்தாயின் மகனப்பாரு அந்தோ பரிதாபம்

ஏழைத்தாயின் மகனப்பாரு 

 அந்தோ பரிதாபம்.....! 

ஏங்கி நிக்குற கதையக்கேளு 

 அய்யோ பரிதாபம்...!


ஆட்சி கையில இருந்தாலே 

 ஆணவத் திமில் விடைக்கும் 

அடுத்த நாட்டுமேல போர்தொடுக்க

 இராணுவத்தப் பலிகொடுக்கும்...!


ராமர் கோவில் கட்டுவேன்னு

 தேர்தல் அறிக்கையில் தூண்டிலாம்

மக்க மவுனமாக இருக்குறவரைக்கும்

 மதமே இவுங்க ஆயுதமாம்..!


கள்ளப்பணத்த ஒழிக்கிறேன்னு 

 கடந்த தேர்தலில் தந்த வாக்கு 

கடுகுடப்பா சேமிப்ப திருடி 

 “செளகிதார்” ஆனதுதான் டாப்பு.!


ஆகாயவிமானம் போகுற 

ஊரெல்லாம் -ராசா 

அரசாங்க காசுல போனாராம்... ! 


அந்நிய நாட்டுல 

இந்தியாவ கூறுபோட்டு 

கூவித்தானே வித்தாராம்...! 


மாட்டுக்கறி திங்காதேன்னு

போட்டாரே ஒரு சட்டம் தான் 

மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு 

போட்டுத்தந்த நல்ல திட்டம்தான்..! 


அம்பானி, அதானிய 

வாழவைக்கவே

அஞ்சு வருசம் மனுசன் 

உழைச்சித் தேய்ஞ்சாராம்..! 


அய்யோ பாவம் இப்போ 

ஏழைத்தாயின் மகனா

மக்கள் முன்னாடி 

 அவதாரம் எடுத்தாராம்...! 


வெள்ளம் வந்துச்சு பாக்க வரல

ஸ்டெர்லைட் பிரச்சனை தீக்க வரல

அனிதா சாவுக்கு நீட்ட நீக்கல

எட்டுவழிச்சாலைத்திட்டம் ஏன்னும் கேக்கல 


தேர்தல் வந்திச்சுன்னு 

தமிழகம் ஓடிவந்தாராம்

தேச ஒற்றுமை காக்கன்னு 

வேஷம் போட்டாராம்


புல்வாமா தாக்குதலில் 

போன உசுர பயன்படுத்தி 

தேர்தல்ல ஓட்டு

கேட்பதென்ன கேவல புத்தி...!


இதை எடுத்துச் சொன்னா 

அவங்க ஆண்டி இந்தியன் 

எழுதினாலோ தேசத் துரோகி

இதுதான் அவரு ராமர் ஆட்சி 

இதுக்கு இப்ப நாடே சாட்சி...! 


ஓட்டுபோட ஒருவாட்டி

நமக்கெல்லாம் வாய்ப்பிருக்கு

ஒன்னாச் சேந்தா இவுங்கள 

விரட்டி அடிக்கவும் வழியிருக்கு...! 


கவிஞர் முகில்நிலா தமிழ், கோவை