election-2019

img

ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ்சை  சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.ஆர்.நடராஜன்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். கோவையின் அமைத்திக்கான வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பி.ஆர்.நடராஜன் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆதரவு பெற்றார். இந்த சந்திப்பின்போது திமுக சிறுபான்மை அணியின் மாவட்ட துணை தலைவர் பிராங்க்ளின், வழக்கறிஞர் கணேஷ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை தலைவர் மூசா, மாவட்ட தலைவர் ஜெரோம்ரோட்டரிக்ஸ் மற்றும் லாரன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.