விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும் அதுவரை கடன் தள்ளுபடி வேண்டும், நதிகள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு 60 வயது முடிந்த பிறகு மகன், மகள், நிலம் இருந்தாலும் பென்ஷன் கொடுக்க வேண்டும், தனி நபர் காப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய அரசியல் கட்சிகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும். மாநில கட்சிகள் அதனை செய்ய இயலாது. ஆகவே ஏப்ரல் மாதம் 6ஆம் தேதிக்குள் தேசிய கட்சி தலைவர்கள் விவசாயிகளை தில்லிக்கு அழைத்து பேசி உறுதி மொழி அளிக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 24ம் தேதி அகோரிகள் வேடத்தில் நிர்வாணமாக காசியில் இருந்து பிச்சை எடுத்து அந்த பணத்தை கொண்டு 25 ஆம் தேதி வாரணாசி தொகுதியில் போட்டியிடும் 111 விவசாயிகளும் வேட்புமனு தாக்கல் செய்வோம்.