election-2019

img

திருப்பரங்குன்றத்தில் குடிகொண்டுள்ள முருகப்பெருமான்

திருப்பரங்குன்றத்தில் குடிகொண்டுள்ள முருகப்பெருமான் அங்கேயே இருப்பதால் அவருக்கு போர் அடித்து ஒருநாள் மதுரையை சுற்றிப் பார்க்க மயில்வாகனத்தில் கிளம்பினார். அப்போது ஒளவை பாட்டியை சந்திக்கிறார். இருவரும் இன்றைய நாட்டு நடப்புகளை பேசிக்கொள்கிறார்கள். 


ஒளவை: முருகா! என்ன இவ்வளவு தூரம்? 


முருகன்: பாட்டி மதுரையை சுற்றிப் பார்க்க வந்தேன் 


ஒளவை: முருகா, இந்த தேர்தல் நேரத்திலா? 


முருகன்: தேர்தலா? என்ன தேர்தல் பாட்டி? 


ஒளவை: முருகா, நாடாளுமன்றத் தேர்தல் 


முருகன்: நாடாளுமன்றத் தேர்தலா? 


ஒளவை: அதான் முருகா, நரேந்திரமோடி...? 


முருகன்: ஓ நரேந்திர மோடியா? அவங்க நம்மள கடவுள் லிஸ்டில் சேர்க்காதவனுங்க. 


ஒளவை: முருகா, மதுரை நாடாளுமன்றத் தேர்தலை பற்றி ஏதாவது... 


முருகன்: பாட்டி நீங்க சொன்னாத்தான் எனக்கு தெரியும். மற்றபடி தேர்தலைப் பற்றி எனக்கும் பெரிசா தெரியாது பாட்டி, 


ஒளவை: முருகா, மதுரையில் ஆளுங்கட்சி - அதான் எடப்பாடி, மோடி கூட்டணில முன்னாள் மேயர் மகன் நிக்காரு, தினகரன் கட்சில முன்னாள் மந்திரி மகன் நிக்காரு. 


முருகன்: ஏன் பாட்டி ஒரே மகன்களா நிக்காங்க. வேறு யாருக்கும் சீட்டு கொடுக்க மாட்டாங்களோ!


ஒளவை: திமுக கூட்டணியில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரா வெங்கடேசன் நிக்காரு.


முருகன்: அது யாரு பாட்டி 


ஒளவை: அவரு காவல்கோட்டம் என்கிற நாவலை எழுதியவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். வேள்பாரி என்கிற வீரவரலாறை எழுதியவர். கீழடியில் நம் முன்னோர்கள் வரலாற்றை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராடுபவர். மதுரை மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.  முருகன்: பாட்டி, தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டவர் போல தெரியுதே! 


ஒளவை: உண்மை, உண்மை முருகா, ஏராளமான தமிழ் மேடைகளில் உரையாற்றுபவர். தமுஎசகவுக்கு மாநில தலைவராக உள்ளார். 


முருகன்: சரி பாட்டி, தேர்தல் களம் மதுரையில எப்படி இருக்கு? 


ஒளவை: முருகா கடந்த ஒரு வாரகாலமாக மதுரையை தான் நான் சுற்றி வருகிறேன். மக்களிடம் நல்ல வரவேற்பு வெங்கடேசனுக்கு உள்ளது முருகா... 


முருகன்: எதை வைத்து சொல்லுத பாட்டி 


ஒளவை: அதுவா முருகா, ஒத்தக்கடை கிராமம் பக்கம் ஒரு நாள் போனேன். அங்குள்ள நரசிங்கம் ஊராட்சியில நல்ல வேட்பாளர் வெங்கடேசன் என்று பொதுமக்கள் தெரிவித்தார்கள். கூட்டணி கட்சிகள் பம்பரமாக வேலை செய்கிறார்கள். அப்புறம் உலகநேரிக்கு போனேன். அரசரடிக்கு போனேன் எல்லா இடத்திலும் தமிழ்ப்பிள்ளை வெங்கடேசனுக்கு நல்ல ஆதரவு இருக்கு முருகா! 


முருகன்: மத்த கட்சிகாரங்க என்ன செய்கிறார்கள் பாட்டி? 


ஒளவை: ஆளுங்கட்சியோ, தினகரனோ துட்டை நம்பி இருக்காங்க முருகா. துட்டை கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்று ரகசிய திட்டம் வைத்துள்ளார்கள். ரொம்ப அமைதியாக செயல்படுவதாக பேசிக்கிடுதாங்க... 


முருகன்: தேர்தல் கமிஷன் என்னதான் செய்யுது பாட்டி?


ஒளவை: முருகா, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அணி சட்டத்தை நம்புது முருகா. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி மின்னல் வேகத்தில் செயல்படுது முருகா. 


முருகன்: தொகுதியின் மற்ற இடங்களில் எப்படி இருக்கு பாட்டி? 


ஒளவை: சிம்மக்கல், தைக்கால், ஆரப்பாளையம், கரிமேடு, வைத்தியநாதபுரம், ஜெய்ஹிந்த்புரம், பெத்தானியாபுரம், பைக்காரா, மேலூர் தொகுதியில் ஆமூர் ஊராட்சி பூஞ்சிட்டி, பதினெட்டாம்கொடி, திருவாதவூர் பகுதியில உள்ள மக்கள் வெங்கடேசனுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். கீரைத்துறை பகுதியில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி செயலாளர் நான் மட்டும் எங்க அணிக்கு ஓட்டு போடுவேன். எங்கள் வீட்டில் உள்ள மற்ற ஓட்டுக்கள் அரிவாள் சுத்தியலுக்குத் தான் என்கிறார். 


முருகன்: வேறு ஏதாவது மக்கள் சொன்னாங்களா பாட்டி? 


ஒளவை: முருகா ஒரு முக்கிய சேதி என்னன்னா மக்கள் இந்த முறை துட்டு கொடுத்தாலும் வாங்க மாட்டார்களாம். அப்படியே துட்டு வாங்கியவர்கள் அந்த கட்சிக்கு ஓட்டு போடமாட்டாங்களாம். இப்படி பரவலா தொகுதி முழுவதும் பேச்சு அடிபடுது முருகா! 


முருகன்: நல்லது தானே பாட்டி, நல்லவர் வெங்கடேசனுக்கு போடட்டும்!


ஒளவை: முருகா தமிழ்க் கடவுளாகிய நீயே சொல்லிட்ட! வெங்கடேசன் வெற்றி பெறுவது உறுதி முருகா! 


முருகன்: அரசாங்க வேலை பாக்குறவங்க என்ன சொல்றாங்க பாட்டி? 


ஒளவை: முருகா! அவங்க மத்தியிலே வெங்கடேசன் தம்பிக்கு வரவேற்பு இருக்கு முருகா, பழங்காநத்தம் பகுதியில் உள்ள அக்ரஹார தெருவிலேயே வெங்கடேசனுக்கு ஏக வரவேற்பு முருகா. 


முருகன்: சிறுபான்மையினர் மத்தியில எப்படி இருக்கு பாட்டி? 


ஒளவை: முஸ்லிம்கள் - கிருத்துவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது முருகா. 


முருகன்: தலித் மக்கள் மத்தியில எப்படி பாட்டி? 


ஒளவை: சொல்லவே வேண்டியது இல்ல, தலித் மக்களின் முழு ஆதரவும் வெங்கடேசனுக்கு உள்ளது முருகா!


முருகன்: போலீஸ்காரங்க என்ன சொல்றாங்க பாட்டி? 


ஒளவை: போலீஸ்காரங்க சுத்தி அரிவாள் முன்னாடி போவுதுன்னு சொல்றாங்க! சில போலீஸ் காரங்க இன்னும் வேகமாக வேலை செய்யுங்க என்கிறார்கள் முருகா. 


முருகன்: தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் என்ன சொல்றாங்க பாட்டி? 

ஒளவை: ஆளுங்கட்சிக்கு கடந்த முறை ஓட்டு போட்டோம். அவரு எம்.பி ஆன பின்னர் தொகுதிக்கு வரவில்லை. பழைய எம்.பி.யால் மதுரை மக்களுக்கு நான் இதனை செய்தேன் என்று சொல்ல முடியவில்லை


முருகா. முன்னாள் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் மேயர், தற்போதைய வடக்கு சட்டமன்ற எம்.எல்.ஏவாக உள்ளவர் ராஜன் செல்லப்பா. இவர் இப்ப குட்டிய விட்டு ஆழம் பாக்குறார். மக்கள் நாங்க இப்ப ஏமாற மாட்டோம் என்கிறார்கள் முருகா. 


முருகன்: அப்ப எட்டுத்திசையும் வெங்கடேசனுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று தெரிகிறது பாட்டி. 


ஒளவை: ஆமாம், ஆமாம் முருகா. 


முருகன்: நல்லது பாட்டி, ரொம்ப நாளைக்குப் பிறகு மதுரையை பாக்க வந்தேன். நீங்க இனிப்பான செய்தியை எனக்கு வழங்கியுள்ளீர்கள். உங்களுக்கு நன்றி. 

தமிழ்ப்பிள்ளை வெங்கடேசன் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாட்டி.


ஆக்கம் : கே.பி.பெருமாள்

;