தமிழகத்தில் இன்று நடைபெறும் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா தனது 97வது வயதில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கரைய்யா அனைவரையும் வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்.