election-2019

img

மீனவர்களுக்கு காவலாளியாக இருக்க முடியாத பிரதமர் மோடி

இராமநாதபுரம், மார்ச் 30-


மீனவர்களுக்கு ‘காவலாளியாக’ இருக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி,கொடநாட்டை கொலைநாடாக மாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு காவலாளியாக இருந்து கொண்டிருக்கிறார் என திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி னார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி மற்றும் பர மக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து இராமநாதபுரத்தில் வெள்ளி யன்று இரவு நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


கொலைகார ஆட்சி


அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது, எங்களுக்கு வாக்களித்தால் பொற்கால ஆட்சி அமைப் போம் என்று, இதுநாள் வரையில் நடைபெற்றது பொற்கால ஆட்சி இல்லை என்பதை அவர்களே தேர்தல் அறிக்கையின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலமாக தந்திருக்கின்றார்கள். 2011-லிருந்து அவர்களின் ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கின்றது, எனவே, பொற்கால ஆட்சியை தருவோம் என்று 

சொன்னால் இப்பொழுது இல்லை என்று தானே பொருள். எனவே, இது பொற்கால ஆட்சி அல்ல; இது கொலைகார ஆட்சி; அதற்கு கொடநாடு சாட்சி.ஒரு கொள்ளையைக் கொலையை ஒரு முதலமைச்சரே முன்னின்று எந்த மாநிலத்திலாவது நடத்தி இருப்பாரா? ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். தற்போது கொலை குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்லப் போகிறவர் எடப்பாடி பழனிசாமி.


முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அவர்கள் இன்றைக்குக்கூட நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். எதற்காக என்றால், ஊர் ஊராகச் சென்று மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். இதைப் பற்றி பேசக்கூடாது. எனவே, தடை உத்தரவு போட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு இன்று (வெள்ளி) சென்றிருக்கின்றார். நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. என்ன தீர்ப்பு வந்தாலும் சரி நான் கவலைப்படப் போவதில்லை, நான் நீதிமன்றத்திற்கு வரத் தயார். நான் பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்தபடி பேசவில்லையே, ஆதாரங்கள் இருக்கின்றன. நாங்களா முதன்முதலில் அதைக் கண்டறிந்தோம். எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தலைவர்களா அதைக் கண்டுபிடித்து வெளி யில் கொண்டு வந்தார்கள்? நீங்கள் யாரை வைத்து இந்தக் காரியத்தை செய்தீர்களோ, இந்தக் கொலைக்கு யார் உங்களுக்கு உடந்தையாக இருந்திருக் கின்றார்களோ அவர்கள் தான் வெளியில் வந்து பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் சொல்லியிருக்கின்றார்கள்.

கொடநாட்டில் இருந்து 2000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கவும், ஓ.பி.எஸ் மட்டுமல்ல, எடப்பாடியிடம், அமைச்சர் களிடத்தில் எல்லோரிடத்திலும் அவருடைய வண்டவாளங்கள் எல்லாம் பதிவு செய்து ஜெயலலிதா வைத்திருந்த பென்டிரைவை எடுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட கொலை தான் கொடநாட்டில் நடைபெற்ற கொலை. அது கொடநாடு அல்ல கொலைநாடு.கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட எடப்பாடி முதலமைச்சர் பதவியில் உட் கார்ந்து இருக்கலாமா? இந்த கொலை குற்றவாளி முதலமைச்சருக்கு துணை நிற்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.

இதே மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் மணிகண்டன் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு வார்த்தையை சொல்லி இருக்கின்றார். அதையும் நான் படித்து பார்த்தேன், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை இரண்டு வருடமாக காப்பாற்றிக் கொண்டிருப்பவர் மோடி, அதனால்தான் நாங்கள் நன்றிக்கடனாக கூட்டணி வைத்து இருக்கின்றோம் என்று சொல்லியிருக்கின்றார். இதைவிட ஓபன்

ஸ்டேட்மெண்ட் யாரால் கொடுக்க முடியும்? எனவே, இரண்டு வருடமாக மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சி தான் எடப்பாடி ஆட்சியை காப்பாற்றி வைத்துக் கொண்டி ருக்கிறது. மோடி அவர்கள் எதற்காக எடப்பாடியை காப்பாற்ற வேண்டும் இதனால் மோடிக்கு என்ன லாபம்? பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் புதிது புதிதாக வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுவார். இப்பொழுது சொல்லக்கூடிய வார்த்தை “காவலாளி - இந்தியாவின் காவலாளி”, நீங்கள் காவலாளி தான் அதை நான் மறுக்கவில்லை, நீங்கள் யாருக்கு காவலாளியாக இருக்கின்றீர்கள் என்றால் எடப்பாடிக்கு காவலாளியாக இருக்கின்றீர்கள்.


மீனவர்களை பாதுகாக்க துப்பில்லாத மோடி அரசு


மீனவர்கள் எப்படிப்பட்ட கொடுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி இங்கு புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொன்னார்கள். அந்த மீனவர்களுக்கு காவலாளியாக இருக்க முடியவில்லை. ஆனால், கொலை செய்திருக்கக்கூடிய - கொள்ளைக்கார ஆட்சி நடத்துகின்ற எடப்பாடிக்கு இன்றைக்கு மோடி காவலாளியாக இருக்கின்றார். கடந்த முறை தேர்தல் நேரத்தில் இதே தமிழ்நாட்டிற்கு பலமுறை மோடி வந்தார். வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளைத் தந்தார், அதில் ஒன்று மீனவர்களைக் காப்பாற்றுவேன் என்று சொன்னது. தன்னுடைய ஆட்சி யில் ஒரு மீனவர் கூட சாகமாட்டார் என்று சொன்னாரா இல்லையா? மீனவர்களைப் பொறுத்தவரையில் துக்ககர மான செய்திதானே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.எத்தனையோ மீனவர்கள் இதுநாள் வரையில் இறந்து போயிருக் கின்றார்கள். ஒரு மீனவர் கூட இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற அந்த உறுதியை பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே அளித்திருக்கின்றார். ஆனால், பல மீனவர்கள் இன்று வரை கைதாகி இலங்கை சிறையில் வாடிக்கொண்டி ருக்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சனை, குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய மீனவர் களுக்கு பாகிஸ்தானால் பிரச்சனை. 


எனவே, இந்த இரண்டு மாநிலங் களுக்கு பிரதிநிதிகளை நியமித்து மாநில அளவில் இருக்கும் மீனவர்களை ஒன்று சேர்த்து இதற்கென்று ஒரு அமைப்பை துவங்குவோம் என்று வாக்குறுதி தரப்பட்டது.

5 வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றதா? பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்குச் சென்றார், மீனவர் பிரச்சனை என்பது தீர்ந்துவிட்டதா? இலங்கையில் இருக்கக்கூடிய அதிபர் இந்தியாவிற்கு வந்து பிரதமர் அவர்களைச் சந்தித்தார். மீனவர்கள் பிரச்சனை அப்பொழுதாவது தீர்ந்ததா? இலங்கை அரசு மிக மோசமான, கொடுமையான ஒரு சட்டத்தை 2017 ஆம் ஆண்டு நிறை வேற்றியது. அது என்னவென்றால், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை, சிறை மட்டுமல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் அபராதம். இதைவிட மோசம் என்னவென்று கேட்டீர்கள் என்றால் இலட்சக்கணக்கான மதிப்புள்ள படகுகளை பறிக்கிறார்கள், உடைக்கிறார்கள். இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய அக்கிரமமான செயல்.இதைவிட மோசமான செய்தி, நான், படகுகளை பிடித்துக்கொள்ளுங்கள்; ஆனால் மீனவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்று தான் சொன்னேன் என்று சொன்னவர் சு.சாமி. சுப்பிரமணிய சுவாமி யார் என்று கேட்டால் மோடிக்கு நெருங்கியவர். நண்பர். பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர்? இப்படிப்பட்ட வார்த்தையைச் சொல்லி இருக்கின்றார் என்று சொன்னால் அப்படிப்பட்ட பி.ஜே.பி-யை இந்த இராமநாதபுரத்தில் விட்டு வைக்கலாமா? அவர்களை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டாமா?


தாதுமணல் ஊழலில் ரூ.50லட்சம் கொள்ளை


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லுகின்ற போது பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்கூட இந்த அ.தி.மு.க ஆட்சி யில் எந்தக் குற்றத்தையும் சொல்ல முடியாது என்கிறார்.

உங்கள் ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்திருக்கின்றது என்பது பற்றி உங்கள் கூட்டணியில் இடம் பெற்றி ருக்கின்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்  பெரிய ஐயா அவர்கள் அ.தி.மு.க-வின் கதை என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கின்றார். அதிகம் சொல்ல நேரமில்லாத காரணத்தால் முடிந்தளவிற்கு சொல்லு கின்றேன், ஆற்று மணல் ஊழல், தாது மணல், வண்டல், கட்டுமான பணிகள் ஒப்பந்த ஊழல், பணி நியமன ஊழல். நெடுஞ்சாலை ஊழல், ஊழலை மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால் 10 வருடத்தில் 70 இலட்சம் கோடி ஊழல். தாதுமணல் ஊழலில் 50 இலட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜெயலலிதா, ஓ.பி.எஸ்ஸை மிரட்டிப் பறித்தது போக இன்னும் 30,000 கோடி ரூபாய் சொத்து இன்னும் இருக்கின்றது என்று அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கின்றார்.

எனவே இப்படிப்பட்ட கொள்ளைக் கார, கொலைகார, ஊழல் ஆட்சியாளர்களையும், தமிழகத்திற்கு எல்லையற்ற துரோகங்களையும் வஞ்சகங்களையும் இழைத்த நரேந்திர மோடி ஆட்சியையும் இந்தத் தேர்தலில் தூக்கியெறிய வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.;