தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மதுரை தமுக்கத்தில் கம்பீரமாக சிலை வைக்கப்பட்டுள்ளது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது மதுரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கலைஞரின் ஒப்புதலைத் தொடர்ந்து மதுரை நீதிமன்றம் அருகே நடிகர் திலகத்திற்கு சிலை நிறுவப்பட்டது. இங்கே உள்ள வைகைக் கரைதான் ஏராளமான நாடக நடிகர்களின் பயிற்சிப் பட்டறையாக திகழ்ந்தது. சொக்கநாதர் கோவிலில் இருந்து யானைக்கால் போகும் வழியில் சச்சிதானந்தம் பிள்ளை தெரு உள்ளது. சச்சிதானந்தம் பிள்ளையிடம்தான் எம்ஜிஆர் நாடகப் பயிற்சி பெற்றார். அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளிவந்தபோது அதிகாலை 5.30 மணிக்கு அங்கு வந்த எம்ஜிஆர் தனது ஆசானுக்கு வணக்கம் செலுத்திவிட்டுப்போனார். இப்பொழுதும் அந்தத் தெருவை எம்ஜியார் வந்துபோன தெரு என்றுதான் அழைப்பார்கள். நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் கலைஞர்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று. ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு கலைஞர்.படைப்பின் மூலம் ஒருவன் அறியப்படுகிறான் என்றால் அதுதான் அவனுக்குப் பெருமை. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வேட்பாளர்தான் நமது சு.வெங்கடேசன். எப்போதும் கலைஞர்களை கொண்டாடி வந்த மதுரை மண் சு.வெங்கடேசனுக்கும் மகுடம் சூட்டும் என்றார்.
என். நன்மாறன் தொடக்கவுரையில்