election-2019

img

ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜன சேனா வேட்பாளர் கைது

ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜன சேனா வேட்பாளர் மதுசூதன் குப்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காளை 7 மணிக்கு தொடங்கியது. 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஆந்திராவில் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீசில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் பெயர்கள் சரியாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி தரையில் அடித்து உடைத்தார். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.