education

img

விளையாட்டு வீரர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய தபால் துறையில் தமிழ்நாடு பிரிவில் (Tamil Nadu Circle) உள்ள 231 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Postal Assistant/ Sorting Assistant
காலியிடங்கள்: 89
சம்பள விகிதம்: ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர்: Postman 
காலியிடங்கள்: 65
சம்பள விகிதம்: ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

3. பணியின் பெயர்: Multi Tasking Staff 
காலியிடங்கள்: 77
சம்பள விகிதம்: ரூ.18,000 - 56,900
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 31.12.2019 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். வயது வரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், இதர பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை கணினிமயமாக்கப்பட்ட ஏதாவதொரு தபால் நிலையத்தில்செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்று விண்ணப்பத்தில் தேவையான இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் Sports Quota Recruitment-2019 என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Director(Recruitment), O/o, The Chief Postmaster General, Tamil Nadu Circle, Chennai - 600002.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 31.12.2019.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;