education

img

பட்டதாரிகளுக்கு தேசிய தகவல்தொடர்பு  மையத்தில் வேலை

கொல்கத்தாவில் உள்ள தேசிய தகவல் தொடர்பு மையத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Scientist – B
காலியிடங்கள்: 288 (UR -119, SC -43, ST -21, OBC -77, EWS -28)
சம்பள விகிதம்: ரூ.56,100 – ரூ.1,77,500.வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர்: Scientific/Technical Assistant
காலியிடங்கள்:  207 (UR -86, SC -31, ST -15, OBC -55, EWS -20) வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electronics/ITI/ECE/Tele Communications/Computer Science/Software System ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை
உச்ச வயதுவரம்பில் அருந்ததியர் பிரிவினர்களுக்கு 5 வருடமும், இதர பிரிவினர்களுக்கு 3 வருடமும், விதவை பிரிவினர்களுக்கு 10 வருடமும் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
Scientist – B பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையிலும் Scientific/Technical Assistant பணிக்கு எழுத்துத்தேர்வு மூலமாகவும் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வானது சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.800. அருந்ததியர், விதவை பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : www.calicut.nielit.in/nic என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.3.2020

;