education

img

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளநிலைப் பட்டதாரிகளுக்கான 3614 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 3,614

பயிற்சியின் பெயர்கள்: 

1. Trade Apprentice

2. Technician Apprentice

3. Graduate Apprentice

செக்டார் வாரியான காலியிடங்கள் விவரம்:

வடக்கு செக்டார் - 209

மும்பை செக்டார் - 305

மேற்கு செக்டார்- 1434

கிழக்கு செக்டார் - 744

தெற்கு செக்டார் - 694 (சென்னை-50, காக்கிநாடா-58, ராஜமுந்திரி-353, காரைக்கால்-233), 

மத்திய செக்டார் -228 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 15.05.2022 தேதியின்படி, 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9000, டிரேடு அப்ரென்டிஸ் ரூ. 8050, டிப்ளமோ அப்ரென்டிஸ் ரூ. 8,000.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeshipindia.org, www.portal.mhrdnats.gov.in  என்ற லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.05.2022 

மேலும் விவரங்கள் அறிய www.ongcindia.com அல்லது  www.ongcapprentices.ongc.co.in என்ற லிங்கை பயன்படுத்திக்கொள்ளலாம். 

;