மயிலாடுதுறை ஏப்.7- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளை யாட்டம் கிராமத்தில் ஆயிரக்கணக் கான இராட்சச குழாய்களை ஓஎன்ஜிசி நிறுவனம் இரவோடு, இரவாக மலைப்போல் குவித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் குழாய்கள் அடுக்கி வைக் கப்பட்டுள்ள கிடங்கின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வியாழ னன்று நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வெண் ணிலா, விஜயகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரியேல், கலைச்செல்வி, அம்மையப்பன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர் சங்கம், மாதர் சங்க நிர்வா கிகள், விவசாயிகள் போராட் டத்தில் கலந்துக்கொண்டனர். போராட்டம் குறித்து மாவட்ட செயலாளரும், திருவிளையாட்டம் ஊராட்சியின் முன்னாள் தலைவரு மான பி.சீனிவாசன் கூறும் போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக தமிழக அரசு அறிவித்தும் விளைநிலங்களை அழிக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.திருவிளை யாட்டம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி குழாய்களை பதித்தபோது 3 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே விவ சாயிகளிடமிருந்தும், குடியி ருப்புவாசிகளிடமிருந்து பெற்ற நிலையில் தற்போது அதே இடங்களில் 13 மீட்டர் வரை இடங்களை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றது. பல இடங்களில் குடியிருப்பு களை காலிசெய்ய சொல்லி மிரட்டுவதாகவும் தகவல் வரு கிறது. இச்சூழலில் தான் ஓரிரு நாட்களாக இராட்சச குழாய்களை ஓஎன்ஜி நிறுவனம் மலைப்போல இங்கு குவித்து வைத்துள்ளது.மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடைப்பெற்ற பிறகு அப்புறப்படுத்திய ஓஎன்ஜிசி நிறுவனம்.அந்த குழாய்களை திருவிளையாட்டம் கிராமத்தில் வந்து இறக்கி வைத்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தி இருக்கிறது. போராட்டத் தையடுத்து வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்திற் குள் குழாய்களை அப்புறப் படுத்தி விடுவதாக உறுதியளித்த தையடுத்து போராட்டத்தை தற்கா லிகமாக கைவிடுகிறோம். ஒரு வாரத்திற்குள்ளாக குழாய்களை அப்புறப்படுத்தவில்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடு வோம் என தெரிவித்துள்ளார்.