education

img

ஆவின் நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு

மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் உள்ள 30 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Senior Factory Assistant
காலியிடங்கள்: 30
சம்பள விகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை “General Manager M.D.C.M.P.U.Ltd” என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுக்க வேண்டும். SC/ SCA/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager, Madurai District Cooperative Milk Producers, Union Ltd, Sathamangalam, Madurai - 625020.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.7.2019, மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;