education

img

மருத்துவ மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
கலந்தாய்வுக்காக கடந்த 3ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். 
நாளை மாலை 5 மணி வரை மட்டுமே மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் நவ.16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tnmedicalonline.xyz/ug/mbbs_bds/index.aspx என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.