education

img

CBSE பள்ளிகள் அமைக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை - ஒன்றிய அரசு

புதுதில்லி,பிப்.22- சி.பி.எஸ்.இ பள்ளிகள் அமைக்க இனி அந்தந்த மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாநிலத்தில் சி.பி.எஸ்.இ பள்ளி அமைப்பதற்கு அந்த மாநில அரசு வழங்கும் தடையில்லா சான்றிதழ் இனி அவசியம் இல்லை என விதிகளில் திருத்தம் செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் மாநில உரிமையைப் பறிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நடைமுறை 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது