ஆங்கிலத்தில் பேசும்போது குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
1. “யார்?” அல்லது “எது?” என்ற கேள்விக்கான விடைதான் முதலில் வரவேண்டும். (பதில் I, We, They, You, He, She, It என்பதில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கும்)
சில புத்திசாலிகள் உடனே கேட்பார்கள். Geetha, Mala, Mangai, Muneesh, Rafeeq என்றெல்லாம் வருகிறதே Old man, Little boy, Conductor, Driver என்று கூடச் சொல்கிறோமே. Elephant, Dog, Horses, Donkeys இப்படி பலப்பல...
இவை எல்லாமே அடிப்படையில் I, We, They, You, He, She, It என்பதில் அடங்கிவிடும்.
2. “யார்?” அல்லது “எது?” என்பதற்கான விடை வந்த பின் அதுதான் முதல் வார்த்தை. அதன் விரிவாக்கமும் இருக்கலாம்.
யார்?
He
யார்?
Ganesh
யார்?
My friend Ganesh
3. “என்ன செயல்?” என்பதற்கான விடை தேட வேண்டும்.
Draw, paint, keep, study, drink, sleep.
4.அடுத்ததாக, Tense
Ganesh drew (Past Tense)
Ganesh draws (Present Tense)
Ganesh will draw (Future Tense)
Ganesh is drawing (Present Continuous Tense)
Ganesh was drewing (Past Continuous Tense)
Ganesh will be drawing (Future Continuous Tense)
இன்னும் பல Tenseகள் உள்ளன. அவற்றை அடுத்த levelல் கற்றுக் கொள்ளலாம்.
5. “யார்?”, “செயல்?” “Tense” இவற்றுக்குப் பிறகு “எதை?” “யாரை?” என்ற வினாவுக்கு விடை தேடவேண்டும்.
Ganesh drew a picture
6. அடுத்ததாக “எங்கே?” என்ற வினாவுக்கான விடை.
Ganesh drew a picture in his notebook.
Ganesh drew a picture in sneha’s notebook.
எங்கே எப்படி எப்பொழுது எவ்வாறு, ஏன் என்ற வினாக்களுக்கான விடையெல்லாம் வாக்கியத்தின் இறுதியில் வரும் (பெரும்பாலும் இவை இப்படித்தான் வரும். Exceptions are always there விதிவிலக்குகள் உண்டு)