education

img

யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யு.பி.எஸ்.சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.
2023-ஆம் ஆண்டின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியானது. https://upsc.gov.in என்ற இணையதளத்தில் முதல்நிலை தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம்.
இந்த தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வில் தகுதி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யு.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது.