குஜராத் மாணவி ஒருவர் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த நிலையில் தற்போது 12 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இயற்பியலில் வெறும் 21 மதிப்பெண்கள் மற்றும் வேதியியலில் 31 மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்த நிலையில் மறு தேர்வு எழுதி இயற்பியலில் ஒரு மதிப்பெண் மட்டுமே அதிகம் பெற்ற தோல்வியடைந்துள்ளார், வேதியியலில் குறைந்தபட்ச மதிப்பெண் 33 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் இதனால் இவரால் இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் சேர இயலாது. ஆனால் இவர் நீட் தேர்வில் இயற்பியலில் 99.98% மற்றும் வேதியியலில் 99.14% பெற்றுள்ளார். பொதுத்தேர்வில் தேர்ச்சி கூடப் பெற முடியாத ஒருவரால் எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடியும் எனக்கூறி இவர் மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.