education

img

நீட் வினாத்தாள் கசிவு ஒன்றிய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை இன்று ஒத்தி வைத்தது மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிப்பு என உறுதியாகத் தெரிந்தால் தான் மறுதேர்வுக்கு உத்தரவிடமுடியும் என நீதிபதிகள் கூறினர் பிறகு ஒன்றிய அரசை நோக்கி சரமாரி கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்

நீட் தேர்வுக்கு மாணவர்களிடமிருந்து ரூ.400 கோடி வசூலித்து விட்டு வினாத்தாள்களை ரிக்‌ஷாவிலா அனுப்புவீர்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்கும் எனச் சந்தேகமாக இருக்கிறது. விடைகளை மே 5 ஆம் தேதியே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5 ஆம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையைத் தயார் செய்திருக்கிறார்கள் , இது உண்மையாக இருந்தால் மே 3 அல்லது 4 ஆம் தேதியே வினாத்தாள் கசிந்திருக்கும். சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி என உச்சநீதிபதி சந்திரசூட் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனத் தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ஆம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதித்து உத்தரவு.