education

img

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை

கல்வி பாதுகாப்பு இயக்கம் சாடல்

சென்னை, நவ.1- புதிய கல்வி வரைவுக்கொள் கையை இறுதிப்படுத்தும் முன்பு தமிழக அரசு அதை அமலாக்க அவசரப்படுவது ஏன் என்று தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு இயக்கம் வினவியுள்ளது. இதுகுறித்து தலைவர் முனைவர் வே.வசந்திதேவி, பொதுச்செயலாளர் ஜே. கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:   5 ஆம், 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டி லிருந்து நடத்தப்படும் என்ற தமி ழக அரசின் அறிவிப்பு வந்துள் ளது. மத்தியரசு மக்களின் கருத்து  கேட்புக்கு விட்டிருக்கும் வரைவு தேசியக் கல்விக் கொள்கை, 2019 இல் மிக அதிகமாக எதிர்க்கப்ப டும் அம்சங்களில் ஒன்று இது. வரைவுக் கல்விக் கொள்கையை மத்தியரசு இறுதிப்படுத்தும் முன்பே, தமிழக அரசு முந்திக் கொண்டு, இவ் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்  பின்  லாந்து நாட்டிற்கு பயணம் செய்த  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கல்வியில் முதலிடத்தில் ஒளிரும் அந்நாட்டின் சிறப்புகளைத் தமி ழகப் பள்ளிகளில் கொண்டுவர முயற்சிக்கப்படும் என்றார். பின்லாந்திலோ வேறு எந்த வளர்ந்த நாட்டிலோ, அல்லது வளரும் நாடுகளிலோ 5, 8  வகுப்பு களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதைக் காட்ட முடி யுமா? பள்ளிகளில் பொதுத்தேர்வு கள் என்பதே உலகம் அறியாத  ஒன்று. வகுப்பு ஆசிரியர்கள் தான்  மாணவர்கள் ஒவ்வொருவரை யும் ஆண்டு முழுதும் அக்கறை யுடன் கவனித்து, அவர்களின் ஒவ்வொரு திறனையும் மதிப்பிடு கிறார்கள். பின்தங்கிய மாண வரையும், தனிக் கவனம் செலுத்தி,  திறன்களை அடையச் செய்கின்ற னர்.  மாணவர் திறன் அடையா விட்டால், அது பள்ளியின் தோல்  வியாக, ஆசிரியரின் தோல்வி யாகப் பார்க்கப்படுகிறது. பத்து வயது குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு என்றால், உல கமே நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும். தேர்வுகள், அதிலும்  பொதுத் தேர்வுகள் மாணவர்க ளுக்கு பெரும் மனஉளைச்சலை அளிக்கும், பேயாக அவர்களை அச்சுறுத்தும் கொடுமை; குழந்தைகள் மேல் ஏவப்படும் வன்முறை; மன்னிக்கவியலா குற்றம். தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படும் மாணவன் காயப்பட்டு, அவமானப்பட்டு, பள்ளியிலிருந்து நின்று விடுவான்.  இடைநிற்றல் மிகவும் அதிக ரிக்கும். 

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதே வாழ்வின் ஒரேலட்சியமாகி, மனப்பாடம் செய்து கொட்டுவதே கல்வி என்ற தண்டனை பத்து வயதுக் குழந்தைக்குக் கொடுக்கப் போகி றோமா? அறிவிப்பு வந்தவுடனே, கோச்சிங் சென்டர்கள் நூற்றுக் கணக்கில் முளைத்து விடும். விறு விறுப்பாக வியாபாரம் தொடங்கி  விடும். அவற்றின் விளம்பரங்க ளில் மயங்கி, பெற்றோர் பணத்  தைக் கொட்டி, தங்கள் குழந்தை களின் குழந்தைப் பருவத்தையே தயங்காமல் பறித்துவிடுவர்.  தோல்விக்கு அந்தமாணவன் மட்டுமே பொறுப்பா? தமிழகப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்  பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. தொடக்கப் பள்ளி களில் ஐந்து வகுப்புகளுக்கு பெரும்பாலும் இரண்டு ஆசிரி யர்தான். ஒரு வகுப்பில் நான்கு மாணவரே இருந்தாலும், அனைத்துப் பாடங்களையும் அவர்களுக்குக் கற்பிக்கத்தானே வேண்டும். 8 ஆம் வகுப்பு வரை  பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இல்லை. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தவிர, அலுவலகப் பணி கள் முதற் கொண்டு, மற்ற பல பணிகள். உள் கட்டமைப்புகளில் இருக்கும் குறைகள் குறித்து சொல்லவே வேண்டாம்.  இவற்றிற்கெல்லாம் அரசு  பொறுப்பில்லையா? தோல்வி  அரசினுடையதா, மாணவனு டையதா? Input தரமாக இருந்  தால் தான் outcome தரமானதாக  இருக்க முடியும். இது அனைத்துத்  துறைகளுக்கும் பொருந்திய பால பாடம். 

இதில் பாடத்திட்ட சுமை வேறு  அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது.அத்துடன், ஆங்கில வழிக்கல்வி யில் எதுவுமே புரியாத புகை  மூட்டத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மாணவன் ஐந்து  வகுப்பிற்குள் ஆசுவாசப்படுத்திக் கொள்வதே கடினம்.   சரி. இந்தத் தேர்வுகளில் தோல்வியடையப் போகும் குழந்  தைகள் யார்? நிச்சயம் மேல் வர்க்க, சாதியினரோ, கல்வி கற்ற பெற்றோரின் பிள்ளைகளோ இல்லை.நூற்றாண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட தலித்மக் கள், பழங்குடியினர், சாதி சமு தாயத்தின் மற்ற அடி மட்டத்தினர், விளிம்பு நிலை மக்கள் ஆகி யோர்தான் தகுதியற்றவர் என்று  முத்திரை குத்தப்பட்டு, 5 ஆம் வகுப்பிலேயே வெளியே தள்ளப்  படுவர்; குழந்தைத் தொழிலாள ராக உருவெடுப்பர்.   பெற்றோர்,  ஆசிரியர்,  கல்வி யில், சமூகநீதியில், சாதிஒழிப்பில்,  மானுடத்தில் நம்பிக்கை கொண்ட  அனைவரும் பிஞ்சுக் குழந்தை களை பலியிடும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துக் குரல்  எழுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறியுள்ளனர்.